TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

திருப்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்ததால் தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு – உறவினர்கள் சாலை மறியல்!

Share This Article:

திருப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் நிறுவன மேலாளர் விக்னேஷ், ஸ்கேன் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது ஆக்சிஜன் தீர்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்ததால் தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு – உறவினர்கள் சாலை மறியல்!

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதான விக்னேஷ் என்பவர், பெருமாநல்லூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த மான் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரை ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் சென்றபோது, அவருக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் தீர்ந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆக்சிஜன் தீர்ந்ததால் விக்னேஷுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


Content image

உறவினர்கள் சாலை மறியல்:

விக்னேஷின் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டிய அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், சம்பவத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. விக்னேஷின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம் மற்றும் அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகிய பின்னரே முழுமையான தகவல் தெரியவரும்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions