'டிராகன்' படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா?- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!
பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவான 'டிராகன்' படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான போஸ்டர் வைரலான நிலையில், அது உண்மையான போஸ்டர் அல்ல என ஏஜிஎஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
"சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் டிராகன் 2 திரைப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு குறித்த போஸ்டர்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. குறிப்பிட்ட அந்தப் போஸ்டரும், அதில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் தேர்வு குறித்த அறிவிப்பும் போலியானவை என்பதையும், அவை தயாரிப்புக் குழுவால் வெளியிடப்படவோ அல்லது அங்கீகரிக்கப்படவோ இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என ஏ.ஜி.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.100 கோடி வசூல் செய்த 'டிராகன்'
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான 'டிராகன்' திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ரூ.100 கோடி வசூலை கடந்து இப்படம் சாதனை படைத்தது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். மேலும், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், யூடியூப் பிரபலங்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷித் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
போலியான போஸ்டர் - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்:
இதனை படத்தின் தயாரிப்பு குழுவினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் டிராகன் 2 திரைப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு (casting) குறித்த போஸ்டர்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
குறிப்பிட்ட அந்தச் போஸ்டரும், அதில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் தேர்வு குறித்த அறிவிப்பும் போலியானவை என்பதையும், அவை தயாரிப்புக் குழுவால் வெளியிடப்படவோ அல்லது அங்கீகரிக்கப்படவோ இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இப்படத்தின் கதாநாயகி அல்லது குழந்தை நட்சத்திரம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
அங்கீகரிக்கப்படாத இத்தகைய தகவல்களை நம்புவதையோ, பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் தயாரிப்பு நிறுவனம் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், சரிபார்க்கப்பட்ட எங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக மட்டுமே வெளியிடப்படும்." என்று தெரிவித்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.