TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

'தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்; மதுரையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

Share This Article:

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 28) மதுரையில் தொடங்கி வைக்கிறார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது.

'தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்; மதுரையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

தமிழக அரசின் முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையிலும், தாய்-சேய் நலத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. அரசு மருத்துவ சேவைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிப்பதும், அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவத்தை ஊக்குவிப்பதும் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2026 ஜூன் 22 முதல் திட்டம் தொடங்கும் நாளான செப்டம்பர் 28 வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர். இவர்களுக்கு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 107 மையங்கள் மூலம் தங்க மோதிரங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் சுமார் 100 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Content image

திட்டத்திற்காக முதற்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான tamper-proof packaging-லும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில் இடம்பெறும் ‘தாய்மாமன் சீர்’ என்ற மரபை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குழந்தை பிறப்பை சிறப்பிக்கும் வகையிலும், தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு கூறியுள்ளது.

இத்திட்டம் த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றதாகவும், ஆட்சி அமைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி வருவதாகவும் ஆளும் தரப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில், திட்டத்தின் செயல்படுத்தல் மற்றும் பயனாளிகளுக்கு மோதிரம் வழங்கும் நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

மதுரையில் இன்று நடைபெறும் தொடக்க விழாவைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தகுதியான குழந்தைகளுக்கு திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளையும் அவர்களின் குடும்பங்களையும் கவுரவிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions