TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மகன்களின் 4-வது பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா!

Share This Article:

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை மகன்களான உயிர் மற்றும் உலக்கின் 4-வது பிறந்தநாள் ஜங்கிள் தீம் கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. விழாவின் புகைப்படங்கள் மற்றும் மகன்களுக்கு இருவரும் தெரிவித்த வாழ்த்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

மகன்களின் 4-வது பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா!

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான 'ஐயா' படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். நடிகை, தயாரிப்பாளர் என கலக்கும் நயன்தாரா சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் சினிமா மீது கொண்ட தீவிர ஆர்வத்தில் நயன்தாரா சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், கன்னட சினிமா மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் நயன்தாரா நடித்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் மற்றும் டாக்ஸிக் திரைப்படங்கள், பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றே கூறப்படுகிறது. இவர், தற்போது 'முக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்

ஜங்கிள் தீம் கொண்டாட்டம்:

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் இரட்டை மகன்களான உயிர் மற்றும் உலக் 4-வது பிறந்தநாளை கொண்டாடினர். செப்டம்பர் 26-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த பிறந்தநாள் விழா ஜங்கிள் தீம் அடிப்படையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பசுமையான இலைகள், மரங்கள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் உள்ளிட்ட அலங்காரங்கள் இடம்பெற்றிருந்தன. இரண்டு அடுக்கு கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகளும் விழாவில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Content image

மகன்களுக்கு உருக்கமான வாழ்த்து

உயிர் மற்றும் உலக்கின் பிறந்தநாளையொட்டி விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் சமூக வலைதளத்தில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தங்களது வாழ்க்கையின் மகிழ்ச்சி, ஆசீர்வாதம் மற்றும் இதயத் துடிப்பாக இரு மகன்களும் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் நடனமாடும் வீடியோவையும் பகிர்ந்தனர்.

குடும்பத்துடன் சிறப்பு தருணம்

விழாவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது மகன்களுடன் எடுத்துக்கொண்ட குடும்பப் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions