TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் பணியாற்ற காத்திருக்கிறேன் - நடிகர் சிவகார்த்திகேயன்

Share This Article:

இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் தமக்கு எவ்வித மனக்கசப்பும் இல்லை என்றும், அவருடன் விரைவில் இணைந்து பணியாற்றக் காத்திருப்பதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, இவர்களது கூட்டணிப் படம் தள்ளிப்போனது குறித்து கங்கை அமரன் பேசிய வீடியோ சர்ச்சையான நிலையில், வெங்கட் பிரபுவின் விளக்கப் பதிவிற்கு சிவகார்த்திகேயன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் பணியாற்ற காத்திருக்கிறேன் - நடிகர் சிவகார்த்திகேயன்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் விளக்கம்:

இந்த விமர்சனங்களுக்கும், ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு விளக்கப் பதிவை வெளியிட்டார். அதில், "சிவகார்த்திகேயன் எப்போதும் எனக்கு ஒரு அன்பான நண்பர் மற்றும் சகோதரர். பலவிதமான யூகங்களும், சர்ச்சைகளும் சுற்றி வருகின்றன. ஒரு தந்தையாக, தன் மகனின் படம் தாமதமாகும் போது ஆதங்கம் ஏற்படுவது இயல்புதான். அவருக்கு (கங்கை அமரனுக்கு) முழுமையான சூழல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காக நான் அவரை நிச்சயம் குறை சொல்ல மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், "நான் என் வேலையைப் பொறுத்தவரை மிகவும் அமைதியானவன். தொழில்முறை விஷயங்களை என் தந்தை உட்பட யாருடனும் விரிவாக விவாதிக்க மாட்டேன். பல காரணங்களால் இந்தத் திட்டம் தள்ளிப்போனதே தவிர, இதில் எந்தவித மனக்கசப்பும் இல்லை. நேரம் கூடிவந்து, ஒரு நல்ல கதை அமைந்தால் நான் நிச்சயமாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவேன். எனவே, தயவுசெய்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Content image

சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சியான பதில்:

வெங்கட் பிரபுவின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், "சார், நாமெல்லாம் குடும்பம். இதற்காக போய் தீவிரமாக பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்! உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார். முன்பே சொல்லியிருக்கிறேன்; நான் எப்போதும் வெங்கட் பிரபுவின் ரசிகன். விரைவில் உங்களுடன் பணியாற்றக் காத்திருக்கிறேன்" என பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள்:

தற்போது சிவகார்த்திகேயன், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது 27-வது திரைப்படத்தை (SK27) 'பார்க்கிங்' பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions