TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களைப் பிடித்த காவலர்... நேரில் அழைத்து முதல்வர் விஜய் பாராட்டு!

Share This Article:

குட்கா கடத்தல் வாகனத்தை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த காவலர்களை முதல்வர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. காவலர்கள் சோதனையில் சுமார் 233 கிலோ குட்காவை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களைப் பிடித்த காவலர்... நேரில் அழைத்து முதல்வர் விஜய் பாராட்டு!

கோவை:

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசாரின் சோதனையை கண்ட ஒரு கார் நிற்காமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த காரை காவலர்கள் துரத்திச் சென்றனர். அப்போது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் வேல்முருகன், காரை நிறுத்தும் முயற்சியாக அதன் மேற்கூரை மீது ஏறிக்கொண்டார்.

40 கி.மீ. தூரம் உயிரை பணயம் வைத்து பயணம்:

காரின் மேற்கூரையில் காவலர் இருப்பது தெரிந்திருந்தும், காரை ஓட்டியவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளாங்குறிச்சியில் இருந்து அவிநாசி வரை சுமார் 40 கி.மீ. தூரம் அந்த கார் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காரின் மேற்கூரையில் இருந்த தலைமை காவலர் வேல்முருகன் தனது உயிரைப் பணயம் வைத்து கடத்தல் வாகனத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

Content image

தலைமை காவலருக்கு முதல்வர் பாராட்டு

இந்த சம்பவத்தில் ஆபத்தை பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்டு கடத்தல் கும்பலை பிடிக்க உதவிய கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனை, முதல்-அமைச்சர் விஜய் இன்று நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

233 கிலோ குட்கா பறிமுதல்

பின்னர் காவலர்கள் அந்த காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் காருக்குள் சுமார் 233 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குட்காவை போலீசார் பறிமுதல் செய்ததுடன், காரில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions