TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கேரளா: மலை உச்சியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற மாணவி; பத்திரமாக மீட்ட போலீசார்

Share This Article:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பருந்தும்பாறையில் மலை உச்சியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற பிளஸ் 2 மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

கேரளா: மலை உச்சியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற மாணவி; பத்திரமாக மீட்ட போலீசார்

கேரள மாநிலம்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, தனது எதிர்கால படிப்பு தொடர்பான ஏமாற்றம் காரணமாக பருந்தும்பாறை மலைப்பகுதிக்கு சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவி பிளஸ் 2வில் வணிகப் பிரிவை தேர்வு செய்திருந்த நிலையில், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர், பருந்தும்பாறையில் உள்ள மலை உச்சிப் பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாணவி அனுப்பிய தகவல் மற்றும் மலைப்பகுதியின் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ஆளுவா சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இடுக்கி மாவட்ட வயர்லெஸ் கட்டுப்பாட்டு அறை, இடுக்கி சைபர் போலீசார் மற்றும் பீരുമேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Content image

மாணவி மீட்பு:

அங்கிருந்து கீழே குதிக்க மாணவி முடிவெடுத்துள்ளார். அப்போது, அப்பகுதியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த நபர் மாணவி மலை உச்சியில் ஆபத்தான பகுதிக்கு செல்வதை அறிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் பேச்சுவார்த்தையில் மனம் மாறிய மாணவி தற்கொலை முடிவை கைவிட்டார். இதையடுத்து, உடனடியாக மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions