TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்கக் கூடாது! - சீமான்

Share This Article:

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு தமிழகத்தின் தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்கக் கூடாது! - சீமான்

மேகதாது அணை கட்டும் முயற்சி:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் ₹16,745 கோடி மதிப்பீட்டில் புதிய அணை அல்லது சமநிலை நீர்த்தேக்கத்தை கட்டும் முயற்சியில் கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரைச் சந்தித்து ஒப்புதல் கோரியுள்ள கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், மத்திய அரசின் நிபுணர் குழு ஏற்கனவே அப்பகுதியில் கள ஆய்வு நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியக் கூட்டாட்சிக்கு எதிரானது:

"புதிய அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியை விரைவில் பெற்றே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசி வருவது இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது. காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் வரலாற்றுப்பூர்வ மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை முற்றிலுமாகப் பறிக்கும் நோக்கில் கர்நாடகா செயல்படுகிறது.


Content image

தவெக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை:

தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, கர்நாடகாவின் இந்த அணை கட்டும் முயற்சிக்கு அணுவளவும் அனுமதியளிக்கக் கூடாது. தமிழக சட்டப்பேரவையில் இதற்கெதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், கர்நாடக அரசு தனது பிடிவாதப் போக்கை கைவிடவில்லை.

மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு ஆய்வு நடத்தியதாகக் கூறப்படும் சூழலில், தமிழக அரசு வெறும் மௌனம் காக்காமல், மத்திய அரசுக்கு கடுமையான அரசியல் மற்றும் சட்ட அழுத்தங்களை உடனடியாகக் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துடிக்கும் மேகதாது அணை திட்டத்தை முறியடிக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தவெக அரசு உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும்" என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions