அவசரப்பட்டு சேர்ந்துவிட்டேனா? - செங்கோட்டையன் ஆவேசம்.
தவெக-வில் திடீர் திருப்பம்! விலகுகிறாரா செங்கோட்டையன்? முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கிளப்பிய அதிரடித் தகவல்! தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியிலிருந்து விலகப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் தவெக-விலிருந்து வெளியேறும் முடிவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். "தவெக-வில் இணைந்தது அவசரப்பட்டு எடுத்த முடிவு" என செங்கோட்டையன் தனது நெருங்கிய வட்டாரத்தில் வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன நிலையில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுவது தவெக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது குறித்து செங்கோட்டையன் தரப்பிலிருந்தோ அல்லது தவெக தலைமை இடத்திலிருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

0 Comments
No comments yet. Be the first to comment.