TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

டெட்(TET) சிறப்பு தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு!

Share This Article:

டெட் சிறப்பு தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை சென்னை ஐகோர்ட்டு நீக்கியுள்ளது. இதையடுத்து சிறப்பு தகுதித்தேர்வில் பங்கேற்றவர்களின் முடிவுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெட்(TET) சிறப்பு தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், கடந்த ஜூலை மாதம் சிறப்பு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தங்களின் ஒவ்வொரு ஆண்டு அனுபவத்துக்கும் ஒரு கருணை மதிப்பெண் வழங்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடக்கோரி தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பி. நடராஜன், என். செல்வன் உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப்பிரிவு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்கவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தகுதித்தேர்வுக்கான முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

Content image

மனுதாரர்கள் இடைக்கால கோரிக்கை ஏதும் வைக்காத நிலையில், ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதான வழக்கில் இறுதி விசாரணைக்குத் தயாராக இருப்பதால், தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று, ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கியும், முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டார். மேலும், பணி அனுபவத்துக்கான ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ஒரு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி ஆசிரியர்கள் தாக்கல் செய்த பிரதான வழக்கை வருகிற 7-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions