TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தூத்துக்குடியில் சாலை வழிகாட்டி பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துகள்: பரபரப்பு!

Share This Article:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் பிரதான சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. SH-93 சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்தப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் ஊர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தூத்துக்குடியில் சாலை வழிகாட்டி பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துகள்: பரபரப்பு!

தூத்துக்குடி,

சாத்தான்குளத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப் பட்டு இருந்த வழிகாட்டி பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழிகாட்டி பலகையில் இந்தி எழுத்துகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்- நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இங்கு சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் திருச்செந்தூர் ரோடு விலக்கு அருகில் புதிதாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப் பட்டு உள்ளது.

இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, நெல்லைக்கு செல்லும் வழித்தடங்கள் அம்புகுறியிட்டு காட்டப்பட்டு உள்ளன. மேலும் அந்த பலகையில், முதலில் ஊர் பெயர்கள் தமிழிலும், அடுத்து இந்தியிலும், 3-வதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உள்ளன.

Content image

பரபரப்பு

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரும்பாலான இடங் களில் வைக்கப்பட்ட வழிகாட்டி பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துகள் உள்ளன. ஒரு சில பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் கடைசியாகவே உள்ளன. ஆனால் சாத்தான்குளத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தியில் பெரியளவில் எழுத்துகள் இருந்ததை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

எழுத்துகள் அகற்றம்

மாநில அரசு வைத்த பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் பெயர்கள் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கடும் எதிர்ப்பையடுத்து சாலை வழிகாட்டி பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டன.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions