TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

செவிலியர்களின் முதுகில் குத்தும் தவெக அரசு: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

Share This Article:

பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய செவிலியர்களை கைது செய்ததாகக் கூறி தவெக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, தற்போது செவிலியர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

செவிலியர்களின் முதுகில் குத்தும் தவெக அரசு: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

சென்னை:

செவிலியர்களின் பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததாகக் கூறி, தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக அரசின் துரோகத்திற்கு செவிலியர்கள்தான் தற்போதைய இரையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தங்களது உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களை காவல்துறையைக் கொண்டு கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

போராடும் செவிலியர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகர் குற்றம்சாட்டியிருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து போராட்டக் களத்தில் இருந்த செவிலியர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Content image

தேர்தல் வாக்குறுதியை சுட்டிக்காட்டி விமர்சனம்

எதிர்க்கட்சியாக இருந்தபோது செவிலியர்களின் போராட்டக் களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்ததாகவும், தேர்தல் நேரத்தில் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், தற்போது அதே கோரிக்கைகளை முன்வைத்து செவிலியர்கள் போராடும்போது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதாக விமர்சித்துள்ளார்.

இதனை அரசின் முரண்பாடான அணுகுமுறை என சாடிய அவர், முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்கள் இதுகுறித்து என்ன பதில் கூறப் போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரவிலும் தொடர்ந்த போராட்டம்

போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செவிலியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது தான் தவெக கூறும் “மாற்றமா?” என்றும், இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தையும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் விஜய், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions