TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

குலசை முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத் சாமி தரிசனம்: தசரா விழா ஏற்பாடுகள் ஆய்வு!

Share This Article:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் ஸ்ரீநாத் சாமி தரிசனம் செய்தனர். வருகிற 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் தசரா திருவிழா மற்றும் 20-ந்தேதி நடைபெறும் மகிஷாசூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

குலசை முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத் சாமி தரிசனம்: தசரா விழா ஏற்பாடுகள் ஆய்வு!

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உலகப்புகழ் பெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் திருவிழாக்களில் ஒன்றாகும்.

இந்த ஆண்டு குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் வரும் 20-ந்தேதி இரவு குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்திற்கு வருகை தருவது வழக்கம்.

அமைச்சர்கள் சாமி தரிசனம்

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் இன்று குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள், தசரா திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் மற்றும் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions