"முதல்வர் விஜய் "நாளை வண்டலூர் ஊனமாஞ்சேரி செல்கிறார்
முதல்வர் விஜய் , நாளை ஊனமாஞ்சேரியில் நடைபெறும் 14-வது பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.
முதல்வர் விஜய் , நாளை "'ஊனமாஞ்சேரியில்""...நடைபெறும் பயிற்சி காவல் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
சென்னை வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரி... போலீஸ் பயிற்சி அகாடமியின் கீழ் பயிற்சி பெற்றுவரும் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் "முதல்வர் விஜய்" பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நிறைவு விழா
14-வது பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களின் (டி.எஸ்.பி.) பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா ஊனமாஞ்சேரி... நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்று பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். மேலும், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்பதையொட்டி, ஊனமாஞ்சேரியில்... மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் விஜய் வருகை தரும் வழித்தடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பயிற்சி நிறைவு பெறும் காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில், அவர்களின் பயிற்சி மற்றும் பணிக்கால அனுபவங்கள் தொடர்பான நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.
விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் காவல்துறை தொடர்பான முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், இந்த நிகழ்ச்சி அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.