TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மாத்திரை கவர்களில் இந்தி எழுத்து வந்தது எப்படி? – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

Share This Article:

கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மாத்திரை கவர்களில் இந்தி இடம்பெற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இந்த மாத்திரை கவர்கள் திமுக ஆட்சிக் காலத்திலேயே அச்சிடப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததாக குற்றம்சாட்டிய அவர், சர்ச்சைக்குரிய கவர்களின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கரூரில் தமிழ் மட்டுமே இடம்பெறும் கவர்களும், கோவையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இடம்பெறும் கவர்களும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாத்திரை கவர்களில் இந்தி எழுத்து வந்தது எப்படி? – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

சென்னை:

கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரை கவர்களில் இந்தி இடம்பெற்றது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவினர் உண்மையை மறைத்து அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழியை முன்வைத்து திமுகவினர் அரசியல் செய்வதாக விமர்சித்துள்ளார். கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மாத்திரை கவர்களை தற்போது அரசியல் பிரச்சினையாக மாற்ற முயற்சி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரூர் விவகாரம் குறித்து அமைச்சர் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்கள் பொதுவாக மத்திய சிறையில் இருந்து பெறப்படுகின்றன. அந்த கவர்களில் ‘காலை’, ‘மதியம்’, ‘இரவு’ உள்ளிட்ட குறிப்புகள் தமிழ் மொழியில் மட்டும் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம் என தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய சிறையிலிருந்து மாத்திரை கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இதையடுத்து ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் மாத்திரை கவர்களை அச்சிட 2025 டிசம்பர் 31-ம் தேதி அவசர ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த கவர்கள் 2026 ஜனவரி மாதத்திலேயே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாகவும், அப்போது திமுக ஆட்சிக் காலமே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தற்போது அந்த கவர்களை வைத்து ஆளும் கட்சியின் மீது குற்றச்சாட்டு முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Content image

கோவை விவகாரம் குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள மாத்திரை கவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திமுக ஆட்சிக் காலத்தில் அலுவலக நடைமுறையின் மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாகவும், சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக் காலத்திலேயே இந்தி இடம்பெற்ற மாத்திரை கவர் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு, அது நோயாளிகளின் பயன்பாட்டுக்கும் வந்ததாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, தற்போது இதனை பெரிய பிரச்சினையாக மாற்றி அரசியல் செய்வது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தற்போதைய அரசு நிர்வாகம் கிடங்கில் இருந்த தேவைக்கேற்ப மாத்திரை கவர்களை மட்டுமே கொள்முதல் செய்ததாகவும், ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வடிவமைப்பு அல்லது அதிலிருந்த மொழிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருமொழிக் கொள்கையே தவெகவின் உயிர் மூச்சு

பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையை பெயரளவில் மட்டுமல்லாமல், தனது இயக்கத்தின் உயிர் மூச்சாக தமிழக வெற்றிக் கழகம் கடைப்பிடித்து வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையில் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும், திமுகவினர் இனிமேலாவது மொழி தொடர்பான விவகாரங்களில் அரசியல் செய்வதை தவிர்த்து, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions