TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தஞ்சாவூரில் தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

Share This Article:

தஞ்சை–பட்டுக்கோட்டை வழித்தடத்தில் சில தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை பழைய பஸ் நிலையம் வரையிலான கட்டணம் ரூ.31-ல் இருந்து ரூ.35 ஆகவும், புதிய பஸ் நிலையம் வரையிலான கட்டணம் ரூ.36-ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் பஸ் கட்டணத்தை உயர்த்தக் கோரி உரிமையாளர்கள் தரப்பில் ஏற்கனவே அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூரில் தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

தஞ்சாவூர்:

தஞ்சை–பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் சில தனியார் பஸ்களில் பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பஸ் கட்டணங்கள் கடந்த 2018-ம் ஆண்டுக்கு பின்னர் மாற்றியமைக்கப்படவில்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டீசல் விலை உயர்வு உள்ளிட்ட செலவினங்கள் அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களுடன் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கருத்துகளையும் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கட்டண உயர்வு தொடர்பாக அரசு தரப்பில் இறுதி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில், சில தனியார் பஸ்களில் தன்னிச்சையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தஞ்சை–பட்டுக்கோட்டை வழித்தடத்தில் கட்டண உயர்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை–பட்டுக்கோட்டை வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் பல்வேறு நிறுத்தங்களில் பஸ்கள் நின்று செல்வதால், பொதுமக்கள் நீண்ட காலமாக தனியார் பஸ்களையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை பழைய பஸ் நிலையம் வரை முன்பு ரூ.31 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையம் வரை முன்பு ரூ.36 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.40 ஆக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தொடர்பாக பயணிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Content image

அரசு பஸ்களை நாடும் பெண்கள்

தமிழக அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தின் காரணமாக, பெண்கள் பலரும் அரசு பஸ்களை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், தனியார் பஸ்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தனியார் பஸ்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வருவாய் இழப்பை சமாளிக்க சில பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பயணிகள் கோரிக்கை

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தஞ்சை–பட்டுக்கோட்டை வழித்தடத்தில் முன்பு தனியார் பஸ்களில் அதிகளவில் மக்கள் பயணம் செய்ததாகவும், தற்போது பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதால் தனியார் பஸ்களை பயன்படுத்துவது குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகவும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் விளக்கம்

தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், பெண்களுக்கான இலவச பயணத் திட்டத்தின் காரணமாக தனியார் பஸ்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வருவாய் குறைந்துள்ள நிலையில், டீசல் செலவு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சம்பளம் உள்ளிட்ட அன்றாட செலவுகளைக்கூட சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அரசிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஆனால் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பாக தனியார் பஸ்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என தங்களது பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions