TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் முடிவுக்கு உயர் நீதிமன்றம் ஒப்புதல்

Share This Article:

அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த ஆறு எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சட்டப்பேரவைத் தலைவர் ஜெ.சி.டி. பிரபாகரின் முடிவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் முடிவுக்கு  உயர் நீதிமன்றம் ஒப்புதல்

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த ஆறு எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சட்டப்பேரவைத் தலைவர் ஜெ.சி.டி. பிரபாகரின் முடிவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், அந்த எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள தகுதி நீக்க நடவடிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று  இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ராஜினாமா உண்மையானது என நீதிமன்றம் கருத்து

 அதிமுகவைச் சேர்ந்த ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்ட தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜெ.சி.டி. பிரபகரின் உத்தரவினை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையிலேயே ராஜினாமா செய்திருப்பதாகவும் ராஜினாமா செய்வதற்கான அரசியல் காரணங்கள் குறித்து சபாநாயகர் விரிவான விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தது.

எனினும், ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதால் மட்டும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. நிலுவையில் உள்ள நடவடிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட்டது.



Content image

ஆறு எம்எல்ஏக்கள் யார்?

இந்த வழக்கு தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்ட ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்கள்:

  • மரகதம் குமரவேல் (மதுராந்தகம் )
  • பி. சத்தியபாமா (தாராபுரம் )
  • இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம் )
  • ஜெயக்குமார் (பெருந்துறை )
  • எம்.ஆர். விஜயபாஸ்கர் (Karur)
  • சி. விஜயபாஸ்கர்  (விராலிமலை )

இவர்கள் அதிமுகவிலிருந்து விலகி, பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

ராஜினாமா ஏற்பதில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என அதிமுக புகார்

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள்  கட்சித் தலைவர் ரவி ஆகியோர், எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை ஏற்ற சபாநாயகரின் உத்தரவுகளை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர்.

ராஜினாமாக்கள் தன்னிச்சையாகவும் உண்மையாகவும் அளிக்கப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்பது மனுதாரர்களின் முக்கிய வாதமாக இருந்தது.ராஜினாமா கடிதங்கள் அளிக்கப்பட்ட அதே நாளான 2026 மே 25-ஆம் தேதியே அந்த கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அதன்பின்னர் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தவெகவில் இணைந்ததாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 190-வது பிரிவின்படி, ராஜினாமாக்கள் தன்னிச்சையானவையா, உண்மையானவையா என்பதை சபாநாயகர் உறுதி செய்திருக்க வேண்டும் என அவர்கள் வாதிட்டனர். தங்களது ஆட்சேபனைகளை முன்வைக்க கட்சிக்கு  சபாநாயகர் உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.



Content image

ராஜினாமா செய்தாலும் தகுதி நீக்க நடவடிக்கை தொடரும்: சபாநாயகர் தரப்பு

இந்த மனுக்களுக்கு எதிராக வாதிட்ட சபாநாயகர் தரப்பு, சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களுடன் நேரடியாகப் பேசிய பின்னரே அவர்களது ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தனர் . மேலும் உறுப்பினர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே முடிவெடுத்துள்ளனர் என்பதை உறுதி செய்ததாகவும் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர் .

மேலும், ராஜினாமா செய்துவிட்டதால் மட்டும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகள் ரத்தாகிவிடாது என சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின்படி, கட்சித் தாவல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும். எனவே, ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதற்கு முன்பு நடைபெற்றதாகக் கூறப்படும் கட்சித் தாவல் தொடர்பான நடவடிக்கைகள் தனியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ராஜினாமா கடிதங்களை உறுப்பினர்களே எழுதியிருந்த நிலையில், அவை கட்டாயப்படுத்தப்பட்டோ அல்லது வற்புறுத்தலின் பேரிலோ அளிக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் சபாநாயகர் தரப்பு வாதிட்டது.

மறுபுறம், ராஜினாமா செய்து மற்றொரு அரசியல் கட்சியில் இணைவது ஜனநாயக ரீதியான முடிவு என்றும், அதனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஊழல் அல்லது முறைகேடு நடந்ததாகக் கருத முடியாது என்றும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



Content image

பின்னணி: தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகப் புகார்

மே 13-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெக அரசு 144 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு மே 11-ஆம் தேதி அதிமுக தனது எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், 25 அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, மே 14-ஆம் தேதி சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின்கீழ் தகுதி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பின்னர், சில உறுப்பினர்கள் தங்களது செயலுக்காக மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து, அவர்கள் மீதான நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஆறு உறுப்பினர்களும் மே 25-ஆம் தேதி ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி

மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்தியபாமா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

இருவரும் தவெக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றனர்.

ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதற்கு முன்பாக நடைபெற்றதாகக் கூறப்படும் கட்சித் தாவல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தனியாக விசாரிக்கப்படலாம் என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. மேலும், நிலுவையில் உள்ள தகுதி நீக்க நடவடிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions