TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

400 ஏழைக் குடும்பங்களை தத்தெடுத்து நெகிழ்ச்சிசியடைய வைத்த ராஷ்மிகா மந்தனா – பின்னணியில் 'ரணபலி' ஜெயம்மா கதாபாத்திரம்!

Share This Article:

'ரணபலி' திரைப்பட நாயகி ராஷ்மிகா மந்தனா 400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்து, ஓராண்டுக்கு மளிகைப் பொருட்கள் வழங்க உதவுவதாக நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இதற்கான பின்னணி குறித்த விரிவான செய்தி.

400 ஏழைக் குடும்பங்களை தத்தெடுத்து நெகிழ்ச்சிசியடைய வைத்த ராஷ்மிகா மந்தனா – பின்னணியில் 'ரணபலி' ஜெயம்மா கதாபாத்திரம்!


தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, 400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்து அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்க முன்வந்துள்ள செய்தி ரசிகர்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜெயம்மா கதாபாத்திரமும் மனிதநேய உதவிகளும்:

ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள 'ரணபலி' திரைப்படம் தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 16 அன்று திரைக்கு வரவுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் பின்னணியில், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடும் கதைக் களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் 'ஜெயம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, அக்கதாபாத்திரம் தன் நிஜ வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.






Content image

இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா நெகிழ்ச்சிப் பதிவு:

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா மந்தனா:

*"நாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு வகையில் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனக்கும் ஜெயம்மா கதாபாத்திரத்திற்கும் ஏதேனும் ஒற்றுமை உள்ளதா எனப் பலரும் கேட்கிறார்கள். 'ஆம்' என்பதே என் பதில்.

இதுவரை இதுபோன்ற உதவிகளை நான் வெளியில் சொன்னதில்லை. எனக்கும் என் குழுவிற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என நினைத்தேன். ஆனால், இப்போது இதை வெளிப்படையாகச் சொல்வதற்குக் காரணம், சமூகத்திற்கு உதவ நினைக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு சிறிய உத்வேகமாக இருக்கும் என்பதால் தான்.

இன்று நான் 400 குடும்பங்களைத் தத்தெடுத்துள்ளேன். முதற்கட்டமாக அடுத்த 3 மாதங்களுக்கு அவர்களின் மளிகைப் பொருட்களுக்கான உதவிகளைச் செய்கிறேன். இந்த உதவி அடுத்த ஓராண்டுக்குத் தொடரும். இதன் மூலம் அவர்கள் மளிகைச் செலவைச் சேமித்து, அவர்களின் எதிர்காலத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்."


Content image

"வேதனைகளுக்கு ஈடான மக்களின் சிரிப்பு"

மேலும் தொடர்ந்த அவர், "ஒரு சிறு கருணை கூட யாரோ ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். கடந்த சில வருடங்களாக நான் சந்தித்த உறக்கமில்லாத இரவுகள், காயங்கள், போராட்டங்கள், வலிகள் மற்றும் கண்ணீர் எல்லாவற்றிற்கும் ஈடாக இந்த மக்களின் சிரிப்பு அமைந்திருக்கிறது. இது உண்மையிலேயே விலைமதிப்பற்றது" என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், நிஜ வாழ்க்கையிலும் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க முன்வந்திருக்கும் ராஷ்மிகாவின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions