நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டை கூறுபோட்டு விற்றுவிடுவார்கள்!
திரைத்துறையினர் அரசியலுக்கு வருவதால் ஏற்படும் சவால்கள் மற்றும் த.வெ.க ஆட்சியில் பணவீக்கம், மின்சாரக் கொள்முதல், டெல்டா விவசாயிகள் பிரச்சனை குறித்த விமர்சனங்கள் அடங்கிய விரிவான செய்தி.
நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டை கூறுபோட்டு விற்றுவிடுவார்கள்!
அரசியல் என்பது திரைத்துறையை சேர்ந்தவர்களுக்குத் பொழுதுபோக்கோ அல்லது எளிதில் புகழின் உச்சத்தைத் தொடும் ஏணியோ அல்ல. .அது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் ஒரு பொறுப்புமிக்க சேவையாகும் . ஆனால், சமீபகாலமாக நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. "நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலே நாட்டை கூறுபோட்டுவிட்டுப் போய்விடுவார்கள்" என்ற பொதுமக்களின் ஆதங்கமும் அச்சமும் இன்று முற்றிலும் உண்மையாகிக்கொண்டிருக்கிறது.
வரலாற்றில் திரை அரசியல்வாதிகளும் ஊழலும்
அரசியல் அனுபவமின்றி, வெறும் கவர்ச்சியை நம்பி ஆட்சியைக் கைப்பற்றும் போது நிர்வாகத்தில் ஏற்படும் தொய்வுகள் வரலாறு நமக்குச் சொல்லும் பாடங்களாகும்.
பதவிக் காலத்தில் இருந்தபோதே ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்குச் சென்ற வரலாற்று நிகழ்வுகளும் உண்டு. மேலும், பல நாட்களாக இந்தியாவின் மிகப்பிரபலமான மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும், இறுதியில் உச்ச நீதிமன்றத்தால் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறைத் தண்டனைகள் உறுதி செய்யப்பட்ட சம்பவங்களும் அரசியல் தளத்தில் பெரும் கறையை ஏற்படுத்தியவை.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சாராய ஆலை அதிபர்களுடன் தொடர்புடைய முறைகேடுகள் மற்றும் பினாமி பெயர்களில் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அப்போதைய பிரதமரிடம் எதிர்க்கட்சிகள் முறையிட்ட வரலாற்று நிகழ்வுகளும், கப்பல் வாங்கியதில் நடந்த ஊழல் புகார்களும் அரசியல் வரலாற்றில் மறைக்க முடியாத பக்கங்கள். மதுவிலக்குக் கொள்கைத் தளர்வுகளில் ஏற்பட்ட விவகாரங்கள் எனத் துறைதோறும் அரசியல்வாதிகளின் தவறான முடிவுகள் மக்களுக்குத் துயரத்தையே தந்துள்ளன.
தற்போது திரைத்துறையில் இருந்து வந்த முதல்வர் விஜய் ஆட்சி மாற்றமா? ஏமாற்றமா?
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த கடந்த நான்கு மாதங்களிலேயே மாநிலம் பல்வேறு துறைகளிலும் பின்னடைவைச் சந்தித்து சீரழிந்து வருவதாகக் குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் தொடர் விமர்சனப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
பணவீக்கமும் விலைவாசி உயர்வும்: முதலிடத்தில் தமிழ்நாடு
மத்திய அரசின் தகவல்களை (PIB) மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, நாட்டிலேயே பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்திற்குச் சென்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு, "விலைவாசி உயர்வே ஏற்படவில்லை" என உணவுத்துறை அமைச்சர் கூறும் வழிகட்டிய பொய்களைக் கேட்டு ஏழை மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருப்பதாகச் சாடப்பட்டுள்ளது.
மின்சாரத் துறையில் முறைகேடு புகார்கள்
மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக எச்சரித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையைக் காட்டிலும், திறமையின்மையாலும், கடைசி நேரத்தில் வெளிச்சந்தையில் யூனிட்டுக்கு ₹35 முதல் ₹37 வரை அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க முற்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன் என்றும், அதிமுகவிலிருந்து மேலும் 15 பேரை வாங்குவதற்குப் பணம் போதாமல் தான் மின்சார கொள்முதலில் ஊழல் நடக்கிறதா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
டெல்டா விவசாயிகள் தவிப்பு
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்காமல் தவறான தேதியில் மேட்டூர் அணையைத் திறந்து வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், முறையான திட்டமிடல் இன்றி ₹5 கோடி செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து 'ரீல்ஸ்' எடுத்ததைத் தவிர வேறு எந்த பயனும் விளையவில்லை என்றும் சாடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா என்று தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றித் தவித்து வருகின்றனர்.
தலைமைத்துவமின்மை
மாநில நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டிய முதலமைச்சர், தொலைநோக்குப் பார்வையின்றி உடுப்பி, லண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாக்களில் பங்கேற்பதிலேயே குறியாக இருக்கிறார் என விமர்சிக்கப்பட்டுள்ளது. தொலைநோக்குப் பார்வையும் நிர்வாகத் திறனும் இல்லாத ஒரு அரசாங்கத்திடம் சிக்கித் தமிழ்நாடு தன் கண்முன்னேயே சீரழிந்து வருவதாகவும், ஆட்சியை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாதவர்களின் அலட்சியத்தால் வரும் மாதங்களில் தமிழ்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.