TBC News
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை! பீகாரில் புதிய சரித்திரம்: முதல் முறையாக பாஜக-வைச் சேர்ந்தவர் முதலமைச்சராகப் பதவியேற்பு! செங்கப்பள்ளி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட மக்கள் கடல்: கோவை தேசிய நெடுஞ்சாலையை அதிரவைத்த விஜய்! தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,13,000-ஐ கடந்து புதிய உச்சம்! மாலை அணிவித்து வாக்கு சேகரிப்பு: வில்லிவாக்கத்தில் கார்த்திக் மோகன் தீவிர பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சீயான் 63: மீண்டும் இணையும் 'இருமுகன்' கூட்டணி! விக்ரம் பிறந்தநாளில் வெளியான அதிரடி அப்டேட் - சமையல்காரராக மிரட்ட வரும் விக்ரம்!

Share This Article:

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 63-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'இருமுகன்' படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் ஆனந்த் சங்கருடன் இணையும் விக்ரம், இப்படத்தில் ஒரு அதிரடியான 'சமையல்காரர்' கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

சீயான் 63: மீண்டும் இணையும் 'இருமுகன்' கூட்டணி! விக்ரம் பிறந்தநாளில் வெளியான அதிரடி அப்டேட் - சமையல்காரராக மிரட்ட வரும் விக்ரம்!

தமிழ் சினிமாவின் 'நடிப்பு அரக்கன்' என்று அழைக்கப்படும் சீயான் விக்ரம் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவரது 63-வது படத்தின் (#Chiyaan63) மாஸான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பல்வேறு இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், இறுதியில் ஒரு அதிரடி கூட்டணியுடன் விக்ரம் களம் இறங்குகிறார்.


கடந்த 2016-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'இருமுகன்'. அந்தப் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் தான் தற்போது விக்ரமின் 63-வது படத்தை இயக்கவுள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

Content image

படத்தின் அறிவிப்போடு ஒரு சிறப்பு புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 'First Flame' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் விக்ரம் ஒரு சமையல்காரராக (Cook) அறிமுகமாகிறார். ஆனால், அவர் சாதாரண சமையல்காரர் இல்லை என்பதை புரோமோவில் வரும் வசனங்கள் உணர்த்துகின்றன.


"அவன் வெறும் சமையல்காரன் தானே?" என்று கேட்கும் ஒருவரிடம், "சமையல்காரன் தான், ஆனா அவன் சாதாரணமானவன் இல்ல, ரொம்ப ஆபத்தானவன்" என்று வரும் பின்னணி குரல் படத்தின் மீதான சுவாரசியத்தைக் கூட்டுகிறது. குண்டுகள் வெடிக்கும் இடத்திலும் அசால்ட்டாக சிகரெட் பற்ற வைக்கும் விக்ரமின் லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 'மகான்' படத்திற்குப் பிறகு விக்ரம் - சந்தோஷ் நாராயணன் இணைவது இது இரண்டாவது முறையாகும். ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.


கடந்த ஆண்டு 'வீர தீர சூரன்' படம் வெளியான பிறகு, விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்களே வெளியாகி வந்தன. மடோன் அஸ்வின் அல்லது போடி ராஜ்குமார் இப்படத்தை இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆனந்த் சங்கருடன் விக்ரம் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் ஆக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions