TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

உண்டியல் பணத்தை வாங்கிப் போடுவது மட்டும்தான் அறநிலையத்துறை வேலையா?” – அண்ணாமலை கேள்வி

Share This Article:

பழனியில் சண்முக நதியைத் தூய்மைப்படுத்தும் பணியில் சுமார் 600 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாகத் தெரிவித்த அண்ணாமலை, உள்ளாட்சித் தேர்தலில் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் போட்டியிட வேண்டும் என்றும், கோவில் கழிவுகள் நதியில் கலப்பதைத் தடுக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உண்டியல் பணத்தை வாங்கிப் போடுவது மட்டும்தான் அறநிலையத்துறை வேலையா?” – அண்ணாமலை கேள்வி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சண்முக நதியைத் தூய்மைப்படுத்தும் பணியில் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் ஈடுபட்டனர். இந்தப் பணியில் சுமார் 600 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைப்பின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.தூய்மைப்பணி நிறைவு விழாவில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்போது வீ தி லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், உள்ளாட்சி நிர்வாகத்தில் இருக்கும் குறைகளைச் சரிசெய்வதும் நம்முடைய பொறுப்பு. மாற்றத்தை நம்முடைய பகுதியிலிருந்தே தொடங்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Content image

டெல்லியில் இருப்பவர்களையும், தமிழகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களையும் கேள்வி கேட்பதற்கு முன்பாக, நம்முடைய பகுதிகளில் இருக்கும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் கேள்வி கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.இதற்காக, தூய்மைப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபடும் தன்னார்வலர்கள் தங்கள் பகுதிகளில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய நல்லவர்களையும் திறமையானவர்களையும் அடையாளம் கண்டு, அவர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கிடைக்கும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதையும், ஊழலற்ற நிர்வாகம் நடைபெறுவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து நதிகளின் மாசுபாடு குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் பல இடங்களில் ஆறுகள் சாக்கடைகளாக மாறி வருவதாகக் குற்றம்சாட்டினார். பழனியில் கோவிலில் இருந்து வெளியேறும் கழிவுகள்கூட சண்முக நதியில் கலப்பதாகக் கூறிய அவர், இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

Content image

பயிர்களைப் பாதுகாக்க வேண்டிய வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.மேலும், கோவில்களையும் பக்தர்களின் நலன்களையும் பாதுகாப்பதற்காக இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை, கோவில் உண்டியல் பணத்தை வசூலித்து அரசிடம் ஒப்படைப்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது என்று விமர்சித்தார். கோவில்களை முறையாக நிர்வகிப்பதிலும், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதிலும் துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.சண்முக நதியில் கோவில் கழிவுகள் கலப்பது இந்தப் பிரச்சினைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்ட அண்ணாமலை, நதியை மாசுபடுத்தும் கழிவுகள் கலப்பதைத் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions