TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சென்னை விமான நிலையம் இனி தனியார் வசம்! உலகத் தரத்திற்கு மாறப்போகும் அதிரடி மாற்றம் !

Share This Article:

சென்னை விமான நிலையத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் அதன் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று இந்த அதிரடி மாற்றம் நிகழவுள்ளது.

சென்னை விமான நிலையம் இனி தனியார் வசம்! உலகத் தரத்திற்கு மாறப்போகும் அதிரடி மாற்றம் !

டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் இருப்பது போல, சென்னை விமான நிலையமும் விரைவில் தனியார் வசம் செல்லவுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் அடுத்தகட்ட மேம்பாட்டுப் பணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாட்டின் தற்போதைய தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப சென்னை விமான நிலையத்தில் சர்வதேச அளவிலான போதிய வசதிகள் இல்லை என்றும், இதை மேம்படுத்த ஏஏஐ அமைப்புக்கு பதிலாக ஒரு புதிய தகுதியான நிறுவனத்தை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையிலேயே மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

Content image

தற்போது சென்னை விமான நிலையத்தை ஆண்டுக்கு சுமார் 2.30 கோடி பயணிகள் பயன்படுத்துகின்றனர். புதிய முனையங்களின் விரிவாக்கப் பணிகள் மூலம் இதன் திறன் 3.5 கோடி பயணிகளைக் கையாளும் அளவுக்கு அதிகரிக்கப்பட உள்ளது. இந்த புதிய தனியார்மயமாக்கல் திட்டத்தின் கீழ், சென்னையைப் போலவே கொல்கத்தா விமான நிலையத்தையும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த மாற்றத்தின் மூலம் விமான நிலையத்தின் தினசரி செயல்பாடுகள், வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற மேலாண்மைப் பொறுப்புகளை மட்டுமே தனியார் நிறுவனம் கவனிக்கும். அதே நேரத்தில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறைகளைக் கண்காணிக்கும் மிக முக்கியமான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பணிகள் ஆகியவை தொடர்ந்து மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions