TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு: சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை!

Share This Article:

உளுந்தூர்பேட்டை அருகே காட்டு நேமிலி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு. சுமார் ரூ.50 ஆயிரம் காணிக்கைப் பணம் இருந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு: சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை!

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியலைத் திருடிச் சென்ற 2 மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கோவிலுக்குள் மர்ம நபர்கள் நுழைந்தது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே காட்டு நேமிலி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனைத் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கோவிலில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்கு வந்த 2 மர்ம நபர்கள், கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், கோவிலில் இருந்த உண்டியலை எடுத்துச் சென்ற அவர்கள், அதனை உடைத்து அதிலிருந்த காணிக்கைப் பணத்தைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார், உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Content image

இதனைத் தொடர்ந்து, கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் வந்த 2 மர்ம நபர்கள், உண்டியலை நோட்டமிட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, இந்தக் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயானக் கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனைத் தரிசனம் செய்ததுடன், உண்டியலிலும் காணிக்கை செலுத்தினர். இதனால், திருடப்பட்ட உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் வரை காணிக்கைப் பணம் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், திருடப்பட்ட பணத்தின் உண்மையான மதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions