TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

உருவாகிறதா 'அர்னாப்' புயல்? 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Share This Article:

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்டோபர் 26-ல் 'அர்னாப்' புயலாக மாற உள்ளதால், தமிழகத்தின் 26 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உருவாகிறதா 'அர்னாப்' புயல்? 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் தீவிரமடைந்து அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் முழுமையான புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்துள்ள 'அர்னாப்' என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. அர்னாப் என்றால் வங்க மொழியில் கடல் என்று பொருளாகும்.

Content image

இந்த அர்னாப் புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் தமிழகப் பகுதிகள் மற்றும் கேரளப் பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், புதிய புயல் சின்னம் காரணமாகவும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 15-ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், வருகிற 26-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழகப் பகுதிகளில் நிலவும் சூழல் மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை உள்பட 26 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions