TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

6 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: அதிமுக மனு தள்ளுபடி!

Share This Article:

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை எதிர்த்து தொடரப்பட்ட ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

6 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: அதிமுக மனு தள்ளுபடி!

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சி கொறடா உத்தரவை மீறி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பின்னர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்த நிலையில், இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து அதிமுக கொறடா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்ததுடன், தகுதி நீக்க மனுக்கள் மீது இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்கவும் சபாநாயகருக்கு அதிரடியாக உத்தரவிட்டது

Content image

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முயல்வதாகவும், இந்த விவகாரத்தில் குதிரை பேரம் மற்றும் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் கடுமையாக வாதிடப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, ஒருவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சராக பொறுப்பேற்பது அரசியல் நடைமுறையின் ஒரு பகுதிதான் என சுட்டிக்காட்டியது. மேலும், அரசியல் சாசன விவகாரத்தையும், குதிரை பேரம் தொடர்பான காவல்துறை விசாரணையையும் தனித்தனியாகவே அணுக வேண்டும் எனத் தெளிவுபடுத்தி, அதிமுகவின் ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions