TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தேக்கம்பட்டி சிறையில் திகில்: காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் எஸ்கேப் - தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்!

Share This Article:

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் சமையலறைப் பொருட்களைக் கொண்டு காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடினர். இவர்களில் 4 பேர் பிடிபட்ட நிலையில், எஞ்சிய 13 பேரைப் பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது.

தேக்கம்பட்டி சிறையில் திகில்: காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் எஸ்கேப் - தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்!

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் அதிரடியாகத் தப்பியோடிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியிலிருந்த 4 சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு இந்தச் துணிகரச் செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய 17 பேரில் 4 கைதிகள் மட்டுமே இதுவரை காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 13 கைதிகளைப் பிடிப்பதற்காகத் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சிறையின் மூன்றாவது பிளாக்கில் ஒரே பகுதியில் அடைக்கப்பட்டிருந்த இந்த 17 பேரும் திட்டமிட்டு இந்தத் தப்பியோட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். சிறையின் சமையலறையில் பயன்படுத்தப்படும் பெரிய கரண்டிகள் உள்ளிட்ட பொருட்களை ஆயுதமாகப் பயன்படுத்தி அவர்கள் காவலர்களைத் தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, சிறையில் உள்ள மூன்று முக்கிய பாதுகாப்பு வாயில்களையும் அவர்கள் எப்படித் தாண்டிச் சென்றார்கள் என்பது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்காக அவர்கள் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Content image

இந்தத் தப்பியோட்டச் சம்பவம் தொடர்பாகச் சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, சிறை வார்டன் உட்பட 9 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை சிறைத்துறை டிஐஜி முருகேசன் தலைமையில், சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. கைதிகள் தப்புவதற்குச் சிறைக்கு வெளியிலிருந்து ஏதேனும் உதவி கிடைத்ததா என்பது குறித்தும், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தலைமறைவாக உள்ள கைதிகளைப் பிடிப்பதற்காகத் தனிப்படைகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Content image

தப்பியோடிய 13 பேரில் 3 பேர் மதுரையைச் சேர்ந்த கொலை வழக்குக் கைதிகள் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தேனிக்கு அருகில் உள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், கேரள போலீசாரின் உதவியுடன் எல்லைப் பகுதிகளில் வாகனத் தணிக்கை மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிடிபட்ட 4 கைதிகளிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் மீதமுள்ளவர்களும் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions