TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"மயிலாப்பூர் கிங் நாங்கதான்டா!" - அடையாறில் ஆட்டோவை கவிழ்த்து ரவுடி படுகொலை; இன்ஸ்டாவில் வீடியோ போட்ட கொலையாளிகள் சரண்

Share This Article:

சென்னை அடையாறில் ஆட்டோவை கவிழ்த்து ரவுடி பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பொதுமக்களை பீதியடையச் செய்த நிலையில், தற்போது காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

"மயிலாப்பூர் கிங் நாங்கதான்டா!" - அடையாறில் ஆட்டோவை கவிழ்த்து ரவுடி படுகொலை; இன்ஸ்டாவில் வீடியோ போட்ட கொலையாளிகள் சரண்

சென்னை அடையார் இந்திரா நகர் பிரதான சாலையில் பட்டப்பகலில் நடந்த ஒரு கொடூரக் கொலை சம்பவம் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மைத்திரேயன். காவல் துறையின் பட்டியலில் 'சி' பிரிவு ரவுடியாக உள்ள இவர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, திடீரென அந்த ஆட்டோவை வழிமறித்துத் தாக்கியுள்ளது. ஆட்டோவை வழிமறித்த அந்த கும்பல், ஆட்டோவை நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்த்துள்ளது. பின்னர், ஆட்டோவுக்குள் சிக்கிக்கொண்ட மைத்திரேயனை அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் இரக்கமின்றி நடந்த இந்த பயங்கர கொலைச் சம்பவம் அங்குள்ளவர்களைக் கடும் பீதியடையச் செய்தது.

Content image

கொலை செய்ததோடு மட்டுமில்லாமல், அந்த கொலையாளிகள் ரத்தம் சொட்டும் கத்தியை சுழற்றியபடியே "மயிலாப்பூரில் நாங்கதான்டா கிங்" என்று கத்தியுள்ளனர். பின்னர், இதை அப்படியே தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த அந்த கும்பல், எந்த பதற்றமும் இல்லாமல் அங்கிருந்த ஒரே இருசக்கர வாகனத்தில் மூவராக (Triples) ஏறி தப்பிச் சென்றனர். தாங்கள் செய்த இந்தக் கொடூரக் கொலையை அவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி அதிர்வலையை ஏற்படுத்தியது.பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை மற்றும் கொலையாளிகளின் இன்ஸ்டாகிராம் வீடியோவால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற அந்த மூவரும் நேராக மயிலாப்பூர் காவல் நிலையத்திற்குச் சென்று, காவல் ஆய்வாளர் ரவி முன்னிலையில் தாங்களாகவே சரணடைந்தனர். திரைப்பட பாணியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions