TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தீபாவளிக்கு ரூ.200-ல் 10 மளிகைப் பொருட்கள்: பொதுமக்களுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை!

Share This Article:

விலைவாசி உயர்வால் தவிக்கும் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு சென்னையில் நாளை தொடங்குகிறது.

தீபாவளிக்கு ரூ.200-ல் 10 மளிகைப் பொருட்கள்: பொதுமக்களுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை!

கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. விலைவாசி ஏற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளி பண்டிகையும் நெருங்குவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளனர்.

இந்த விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 200 ரூபாய்க்கு மளிகை தொகுப்பு வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையைப்போல இலவச தொகுப்பு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த மலிவு விலை மளிகைத் தொகுப்புத் திட்டம் நாளை முதல் சென்னையில் முதற்கட்டமாக தொடங்கப்பட உள்ளது.

Content image

சாமானிய மக்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த 200 ரூபாய் சிறப்புத் தொகுப்பில் 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய், தணியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவை அடங்கிய பொட்டலங்கள் இந்த திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த மலிவு விலை மளிகைத் தொகுப்பு, சென்னையில் உள்ள கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவல்லிக்கேணி, அசோக்நகர், பெசன்ட்நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இயங்கும் டி.யு.சி.எஸ். காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மற்றும் அமுதம் அங்காடிகள் மூலமாக இத்திட்டம் விரிவாக செயல்படுத்தப்பட உள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions