TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

வங்கி லாக்கரில் உறைந்த மர்மம்: நொய்டாவில் 35 கோடி ரூபாய் மாயமான அதிர்ச்சி பின்னணி

Share This Article:

கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்பு நிதிகளில் (FD) இருந்து சுமார் 35 கோடி ரூபாய் மர்மமான முறையில் மாயமாகியுள்ளது. விவசாயிகளின் நில இழப்பீட்டுப் பணத்தை குறிவைத்து, வங்கி ஊழியர்களின் துணையுடன் அரங்கேறியுள்ள இந்த மாபெரும் நிதி மோசடியின் இருண்ட பின்னணியை விவரிக்கிறது இந்த க்ரைம் ரிப்போர்ட்.

வங்கி லாக்கரில் உறைந்த மர்மம்: நொய்டாவில் 35 கோடி ரூபாய் மாயமான அதிர்ச்சி பின்னணி

கிரேட்டர் நொய்டாவின் செக்டர் 1 பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கிளை, வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அங்கு தங்கள் சேமிப்பை எடுக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி. தங்கள் கணக்குகளில் இருந்த பல கோடி ரூபாய் பணம் சுவடு தெரியாமல் காணாமல் போயிருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

மோசடியின் வலைப்பின்னல்: இலக்கானது யார்?

இந்த மோசடியில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், ஜெவார் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் வழங்கி இழப்பீடு பெற்ற அப்பாவி விவசாயிகளே. 60 வயதான சந்தோஷ் என்ற தேநீர் மற்றும் சமோசா விற்கும் பெண்மணி, இழப்பீடாக பெற்ற 1.29 கோடி ரூபாயை டெபாசிட் செய்திருந்தார். செவ்வாய்க்கிழமை அவரது மகன் பணம் எடுக்கச் சென்றபோது, கணக்கில் பணமே இல்லை என்ற கொடூரமான உண்மை தெரியவந்தது. அதில் 1.18 கோடி ரூபாய் மாயமாகியிருந்தது. பிரவுண்டி கிராமத்தைச் சேர்ந்த 78 வயதான ஸ்ரீசந்த், தனது குழந்தைகளின் திருமணத்திற்காக 1.16 கோடி ரூபாயை நிரந்தர வைப்பு நிதியாக (FD) வைத்திருந்தார். Maturity தேதியில் அதனை புதுப்பிக்கச் சென்றபோது, பணம் இல்லை என வங்கி ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.


Content image

விவசாயி விஜேந்திர சிங்கின் கணக்கில் இருந்த 87-88 லட்ச ரூபாய், வெறும் 1 லட்சமாக குறைக்கப்பட்டிருந்தது. சஞ்சய் என்ற வாடிக்கையாளர் தனது 12 வயது மகளின் மருத்துவ சிகிச்சைக்காகவும், எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் எடுக்கவும் பணம் எடுக்க வந்தபோது, அவருடைய கணக்கிலிருந்த 60,000 - 70,000 ரூபாய் மாயமாகியிருந்தது. கௌதம் என்ற விவசாயியின் தந்தை கணக்கில் இருந்த 94 லட்சம் ரூபாய், வெறும் 16,000 ரூபாயாக சுருங்கியது. ஹனீப் கான் என்ற வாடிக்கையாளரின் 39 லட்சம் ரூபாயும் எந்தவித அங்கீகாரமும் இன்றி காணாமல் போனது.

குற்றவாளிகளின் திட்டம் :

இவ்வளவு பெரிய தொகை எப்படி யாருக்கும் தெரியாமல் கொள்ளையடிக்கப்பட்டது? விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. வங்கி கணக்கில் பரிவர்த்தனைகள் நடந்தால் வரும் குறுஞ்செய்தி (SMS) சேவையை, மோசடி நடப்பதற்கு முன்பாகவே வங்கி ஊழியர்கள் முடக்கியுள்ளனர். ஜாகிர் என்ற வாடிக்கையாளர் தனது 9.5 லட்சம் மாயமானபோது எந்த மெசேஜும் வரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்க முற்பட்டபோது, 'ஆடிட் (Audit) நடக்கிறது' என வங்கி ஊழியர்கள் தொடர்ந்து தாமதப்படுத்தியுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்தை எடுக்க வேண்டும் என்றால், 4 முதல் 5 நாட்களுக்கு முன்பே வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடுகளை விதித்து, வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த அசாதாரண நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த ஒரு வாடிக்கையாளர், தனது கணக்கை தீவிரமாக சோதித்த பிறகே இந்த மாபெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

Content image

காவல்துறை விசாரணை:

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, கவுதம் புத்த நகர் காவல்துறையின் பீட்டா-2 காவல் நிலையத்தில் 'பாரதிய நியாய சன்ஹிதா' (BNS) சட்டப்பிரிவு 316(5) இன் கீழ் கிரிமினல் நம்பிக்கை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை மதியத்திற்குள் 18 பேர் காவல்துறையை அணுகியதில், 16 கோடி ரூபாய்க்கும் அதிகமான மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மொத்த இழப்பு சுமார் 35 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு (EOW) இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது. வங்கியின் கிளை மேலாளர் உட்பட ஐந்து ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வங்கியின் தலைமை மேலாளர் ராகேஷ் நிகம், "இது ஒரு மோசடி. குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள், ஒரு வாரத்திற்குள் வாடிக்கையாளர்களின் பணம் திருப்பித் தரப்படும்" என வாக்குறுதி அளித்துள்ளார்.வங்கிகளுக்கு உள்ளேயே நடக்கும் இத்தகைய இருண்ட குற்றங்கள், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி வேரறுக்கிறது என்பதற்கு இந்த 'கிரேட்டர் நொய்டா பேங்க் மோசடி' ஒரு வாழும் சாட்சியாக மாறியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions