TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

புதுக்கோட்டையில் திடீர் ட்விஸ்ட்: வீணானதா ரூ.1 கோடி? முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி இடமாற்றத்தால் சர்ச்சை!

Share This Article:

புதுக்கோட்டையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கும் அரசு நலத்திட்ட விழாவுக்காக ஒரு கோடி ரூபாய் செலவில் மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இரவோடு இரவாக நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் திடீர் ட்விஸ்ட்: வீணானதா ரூ.1 கோடி? முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி இடமாற்றத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். கடந்த ஆட்சியின் போது ரூ.23.25 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் மற்றும் ரூ.8 கோடியில் அமைக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றைத் திறந்து வைப்பதோடு, 104 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார். இதற்காக இன்று மதியம் 12 மணிக்கு அவர் புதுக்கோட்டை வருகிறார்.

இந்த நிகழ்ச்சிக்காக முதலில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக பொதுப்பணித்துறை சார்பாக பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மைதானத்திற்குச் செல்லும் சாலையைச் சீரமைப்பது, பந்தல் அமைப்பது என இந்த ஏற்பாடுகளுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டிருந்தது.

Content image

இந்நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பயணத் திட்டம் வெளியான பிறகு, இரவோடு இரவாக விழா நடைபெறும் இடம் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எவ்வித முன் அறிவிப்புமின்றி இந்த மாற்றம் நிகழ்ந்ததால், தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு ஆட்சியர் அலுவலகம் அவசரமாகச் சுத்தம் செய்யப்பட்டு, அதன் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், முதலில் பேருந்து நிலையத்தை திறந்துவிட்டு பின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதலில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு அதன் பிறகே பேருந்து நிலையத்தை முதல்வர் திறக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய இடமாற்றத்திற்கு அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு காரணமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து பிரம்மாண்டமான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த பிறகு, திடீரென எதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது. வீணடிக்கப்பட்ட செலவுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions