TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

திருச்சி செம்பட்டு நில விவகாரம்: தனியார் கல்லூரிக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கான்வாயை மறித்து மக்கள் கண்ணீர்!

Share This Article:

திருச்சியில் 100 ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை மக்களை தனியார் கல்லூரிக்காக காலி செய்ய வற்புறுத்துவதைக் கண்டித்து, செம்பட்டு பகுதி மக்கள் முதலமைச்சர் விஜய்யின் வாகனத்தை மறித்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.

திருச்சி செம்பட்டு நில விவகாரம்: தனியார் கல்லூரிக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கான்வாயை மறித்து மக்கள் கண்ணீர்!

திருச்சியில் தனியார் கல்லூரிக்காக குடியிருப்புகளை காலி செய்ய வற்புறுத்துவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட செம்பட்டு பகுதி மக்கள் முதலமைச்சர் விஜய்யின் கான்வாயை மறித்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர். புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக, தனி விமானம் மூலம் திருச்சி வந்த முதலமைச்சர் அங்கிருந்து சாலை மார்க்கமாகச் சென்றபோது இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியது. திருச்சி விமான நிலையம் அருகே உள்ள செம்பட்டு (என்.எம்.டி காலனி) பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

முன்பு இப்பகுதியில் இயங்கிய தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட குடியிருப்பு இதுவாகும். இங்கு கோயில், பள்ளிவாசல், சர்ச் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும், அங்கன்வாடி மையமும், பொதுக் கழிப்பறையும் அமைந்துள்ளன. பல தலைமுறைகளாக வசிக்கும் இப்பகுதி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதோடு, பல முதியவர்கள் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகளுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

Content image

இந்நிலையில், திருச்சியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி (ஜமால் முகமது கல்லூரி) நிர்வாகத்தினர் போலி ஆவணங்கள் மூலம் இந்த இடத்தை அபகரிக்க முயல்வதாகவும், மக்களை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பலமுறை நேரில் சென்று முறையிட்டும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் விரக்தியடைந்த மக்கள், தங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தாங்கள் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் விஜய் மட்டுமே என முடிவு செய்தனர். முதலமைச்சரின் வாகனம் அப்பகுதியைக் கடந்து சென்றபோது, போலீசாரின் தடையை மீறி பொதுமக்கள் கான்வாயை வழிமறித்தனர். சிறு குழந்தைகளுடன் வந்து கண்ணீர் மல்க முதலமைச்சரிடம் மனு அளித்த அவர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டு, வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்து உடனடியாக தங்களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்தனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions