"அடி அடினு அடிச்சிட்டாங்க.." சூர்யா ரசிகர்களின் செயலால் மனமுடைந்த ஆர்.ஜே.பாலாஜி! - 'கருப்பு' பட அப்டேட்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' படத்தின் இரண்டாவது பாடல் குறித்து எழுந்த விமர்சனங்களால் தானும், இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் மனதளவில் பாதிக்கப்பட்டதாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கருப்பு'. இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போனது. ஒருவழியாக தற்போது வரும் மே மாதம் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'நாங்க நாலு பேரு' பாடல் சர்ச்சை
படத்தின் முதல் பாடலான 'காட் மோட்' (God Mode) நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான இரண்டாவது பாடலான 'நாங்க நாலு பேரு' கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. இது குறித்துப் பேசிய ஆர்.ஜே.பாலாஜி.
"உண்மையில் இந்தப் பாடல் படத்தில் கிடையாது. படக்குழுவினர் கேட்டுக்கொண்டதால் இதை இரண்டாவது பாடலாக வெளியிட்டோம். ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை."
மனமுடைந்த ஆர்.ஜே.பாலாஜி
விமர்சனங்கள் எல்லை மீறியது குறித்து அவர் கூறுகையில், "சமூக வலைதளங்களில் இந்தப் பாடலை வைத்து எங்களை அடி அடி என அடித்துவிட்டார்கள். குறிப்பாக சூர்யா ரசிகர்களும் அவ்வாறு விமர்சனம் செய்தது எனக்கும், இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கும் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் இருவரும் மனதளவில் பாதிக்கப்பட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மே மாதம் ரிலீஸ்
இத்தனை சவால்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில், 'கருப்பு' திரைப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது. ஆர்.ஜே.பாலாஜியின் திரைக்கதையில் சூர்யாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.