TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

முதலைக்கறி சாப்பிட்ட அனுபவம்... சுருதிஹாசன் சொன்ன சுவாரசிய தகவல்!

Share This Article:

சிறுவயதில் முதலை, ஒட்டகம், கடல் குதிரை உள்ளிட்ட வித்தியாசமான இறைச்சி வகைகளைச் சாப்பிட்டதாக நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். தனது தந்தை விதவிதமான உணவுகளைச் சமைத்துக் கொடுத்த அனுபவங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

முதலைக்கறி சாப்பிட்ட அனுபவம்... சுருதிஹாசன் சொன்ன சுவாரசிய தகவல்!

சிறுவயதில் முதலை, ஒட்டகம், கடல் குதிரை உள்ளிட்ட வித்தியாசமான இறைச்சி வகைகளைச் சாப்பிட்ட அனுபவம் குறித்து நடிகை சுருதிஹாசன் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை சுருதிஹாசன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். நடிகை, பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட இவர், நடிகர் கமல்ஹாசன் - நடிகை சரிகாவின் மூத்த மகள் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக 'ஹே ராம்' திரைப்படத்தில் அறிமுகமான இவர், 2009-ஆம் ஆண்டு வெளியான 'லக்' என்ற இந்திப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

முதலை, ஒட்டக இறைச்சி

இந்த நிலையில், சிறுவயதில் தான் ருசித்த வித்தியாசமான உணவு வகைகள் குறித்து சுருதிஹாசன் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது தந்தை சிறுவயதிலேயே விதவிதமான உணவுகளைச் சமைத்துக் கொடுத்திருக்கிறார்". முதலை, ஒட்டகம், கடல் குதிரை உள்ளிட்டவற்றின் இறைச்சியைச் சிறுவயதிலேயே சாப்பிட்டிருக்கிறேன். குட்டி ஆக்டோபஸ் எனக்கு மிகவும் பிடித்த உணவு.

ஒருமுறை குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தபோது, அதில் கடல் குதிரை இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். கடல் குதிரைகள் உண்மையிலேயே இருக்கும் என்பதே எனக்குத் தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.


Content image

வித்தியாசமான உணவுப் பழக்கம்

தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் சுருதிஹாசன், தனது சிறுவயது உணவு அனுபவங்களைப் பகிர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 'முதலை மற்றும் ஒட்டக இறைச்சியைச்' சிறுவயதிலேயே சாப்பிட்டதாக அவர் கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும், 'சுருதிஹாசன்' தனது தந்தை கமல்ஹாசனின் உணவு மீதான ஆர்வம் காரணமாகச் சிறுவயதிலேயே பல்வேறு விதமான உணவுகளைச் சுவைக்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். வழக்கமான உணவுகளைத் தாண்டி, புதுமையான உணவு வகைகளை முயற்சி செய்து பார்த்த அனுபவங்கள் இன்றும் தனக்கு நினைவில் இருப்பதாக அவர் பகிர்ந்துள்ளார். அவரது இந்த வித்தியாசமான உணவு அனுபவங்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions