TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"பாலிவுட்டில் மரியாதையே இல்லை; எல்லாவற்றிற்கும் பேரம் பேசுவார்கள்!" - இந்தி திரையுலகை விளாசும் நடிகை சிம்ரன்!

Share This Article:

தென்னிந்திய சினிமாவின் 'எவர் கிரீன்' நாயகி சிம்ரன், தான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பதில்லை என்பது குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அங்கு அடிப்படை வசதிகளுக்கும், கலைஞர்களுக்கும் மரியாதை இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

"பாலிவுட்டில் மரியாதையே இல்லை; எல்லாவற்றிற்கும் பேரம் பேசுவார்கள்!" - இந்தி திரையுலகை விளாசும் நடிகை சிம்ரன்!

90-களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன், சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலிவுட் திரையுலகம் குறித்த கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். பலமுறை இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தும், அவற்றை தான் நிராகரித்ததற்கான காரணத்தை அவர் பட்டியலிட்டுள்ளார்.



சாதனைகளை மதிப்பதே இல்லை

"பாலிவுட்டில் இருப்பவர்கள் தென்னிந்திய நடிகர்களின் சாதனைகளையோ அல்லது அவர்களின் பாரம்பரியத்தையோ மதிப்பது கிடையாது. அந்த மக்களுடன் என்னால் ஒன்றிப்போக முடியவில்லை. நான் சினிமாவுக்காக என் வாழ்நாளில் பாதி காலத்தைக் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தும் உரிய மரியாதை கிடைக்காத இடத்தில் வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை" என சிம்ரன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Content image

அடிப்படை வசதிகளில் பேரம்

பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் அணுகுமுறை குறித்து பேசிய அவர், "சில நிறுவனங்கள் தங்குமிடம், உதவியாளர்களின் எண்ணிக்கை என அடிப்படை வசதிகளில் கூட பேரம் பேசுகிறார்கள். ஹோட்டல் மற்றும் டிக்கெட்டுகளில் கூட கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். இது போன்ற விஷயங்கள் என்னை மிகவும் பாதித்தன. அதனால்தான் அங்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே எனக்குத் தோன்றுவதில்லை" என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.


சிம்ரனின் தற்போதைய பயணம்

திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்தி வரும் சிம்ரன், அண்மையில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' மற்றும் 'டூரிஸ்ட் பேமிலி' ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions