TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சூர்யாவின் ‘கம்பேக்’.. முன்பதிவிலேயே ரூ. 1 கோடி வசூல்! ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட முன்பதிவு சாதனை!

Share This Article:

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா - த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே ரூ. 1 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

சூர்யாவின் ‘கம்பேக்’.. முன்பதிவிலேயே ரூ. 1 கோடி வசூல்! ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட முன்பதிவு சாதனை!

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு சூர்யாவின் அதிரடி நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ஒரு மாஸ் கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த டிரைலர், சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. "OG இஸ் பேக்", "சூர்யாவின் வெறித்தனமான கம்பேக்" என ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.


மிரட்டும் ஆர்.ஜே. பாலாஜி - த்ரிஷா கூட்டணி

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு த்ரிஷா நடித்துள்ளார். மேலும், ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தை இயக்குவதுடன் மட்டுமல்லாமல், சூர்யாவுக்கு வில்லனாகவும் களமிறங்கியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.

Content image

வசூல் வேட்டையை தொடங்கிய சூர்யா

மே 14-ம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகவுள்ள இப்படத்தின் முன்பதிவு (Advance Booking) தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே தமிழகம் முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, முன்பதிவு வசூலில் மட்டுமே இப்படம் ரூ. 1 கோடிக்கும் மேல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Content image

 ரிலீஸ் தேதி மற்றும் எதிர்பார்ப்பு

கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இப்படம் சில தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே 14-ம் தேதி வெளியாகிறது. டிரைலர் கொடுத்த ஹைப் மற்றும் தற்போதைய முன்பதிவு வேகத்தை பார்க்கும்போது, சூர்யாவின் கேரியரில் இப்படம் ஒரு மிகப்பெரிய ஓப்பனிங்கை பெறும் என சினிமா வட்டாரங்கள் கணிக்கின்றன.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions