TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அடுத்த விவாகரத்தா? கணவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்த மௌனி ராய் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Share This Article:

பிரபல 'நாகினி' சீரியல் நடிகை மௌனி ராய், தனது கணவர் சூரஜ் நம்பியாரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த விவாகரத்தா? கணவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்த மௌனி ராய் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனது நடிப்பால் கவர்ந்தவர் நடிகை மௌனி ராய். குறிப்பாக 'நாகினி' சீரியல் மூலம் தென்னிந்தியா முழுவதும், அதிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். கடந்த 2022-ம் ஆண்டு துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் நம்பியாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவரைப் பற்றி தற்போது ஒரு அதிர்ச்சித் தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Content image

இன்ஸ்டாகிராம் 'அன்ஃபாலோ' சர்ச்சை

திருமணமாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், மௌனி ராய் தனது கணவர் சூரஜ் நம்பியாரை இன்ஸ்டாகிராமில் 'அன்ஃபாலோ' (Unfollow) செய்துள்ளதாக கூறப்படுகிறது. பதிலுக்கு சூரஜ் நம்பியாரும் மௌனி ராயை பின் தொடரவில்லை என ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தம்பதியினர் திடீரென இப்படி செய்திருப்பது அவர்கள் பிரிந்துவிட்டார்களா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.


கேரளாவைச் சேர்ந்த சூரஜ் நம்பியாரை, பெங்காலி மற்றும் மலையாளி என இருமுறைப்படி மௌனி ராய் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வைரலானது. இதுவரை மிகவும் நெருக்கமான தம்பதிகளாக அறியப்பட்ட இவர்களுக்குள் என்ன நடந்தது என்பது புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Content image

தற்போது இந்த விவாகரத்து செய்தி காட்டுத்தீ போல பரவி வந்தாலும், இது குறித்து மௌனி ராய் அல்லது சூரஜ் நம்பியார் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இது வெறும் தொழில்நுட்பக் கோளாறா அல்லது உண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா என்பது அவர்கள் வாய் திறந்தால் மட்டுமே தெரியவரும்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions