TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பொண்டாட்டி கூட செய்ய மாட்டாங்க! ரவி மோகன் காலில் விழுந்த கெனிஷா.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

Share This Article:

கேரளாவில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடிகர் ரவி மோகனின் காலைத் தொட்டு வணங்கிய பாடகி கெனிஷா பிரான்சிஸின் செயல், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பொண்டாட்டி கூட செய்ய மாட்டாங்க! ரவி மோகன் காலில் விழுந்த கெனிஷா.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் (ஜெயம் ரவி), சமீபகாலமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புதிய தொழில் முயற்சிகளால் செய்திகளில் அதிகம் இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் அவரோடு கலந்துகொண்ட பாடகி கெனிஷா பிரான்சிஸ் செய்த செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


ரவி மோகன் - கெனிஷா கூட்டணி

கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக ரவி மோகன் அறிவித்தது முதல், அவருக்கும் பாடகி கெனிஷாவிற்கும் இடையிலான நட்பு குறித்துப் பல்வேறு கிசுகிசுக்கள் பரவின. எதைப் பற்றியும் கவலைப்படாத இருவரும் இணைந்து 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, தற்போது 'ப்ரோ கோட்' மற்றும் 'ஆன் ஆர்டினரி மேன்' ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றனர்.

Content image

கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

சமீபத்தில் கேரளாவில் ஒரு கோவில் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் கலந்துகொண்டனர். மேளதாளங்களுடன் ரவி மோகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மேடையில் பாடத் தொடங்கும் முன்பாக, கெனிஷா திடீரென ரவி மோகனின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.


வைரலாகும் வீடியோ - இணையவாசிகளின் கருத்து

கெனிஷா ரவி மோகனின் காலைத் தொட்டு கும்பிட்டதோடு மட்டுமல்லாமல், அவரை மேடைக்கு அழைத்து உற்சாகப்படுத்தி அவருடன் இணைந்து பாடவும் செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், "மனைவி கூட செய்யாத மரியாதையை கெனிஷா செய்கிறாரே" என்றும், "யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தனது அன்பை வெளிப்படுத்துகிறார்" என்றும் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.


தற்போது ரவி மோகன் நடிப்பில் 'கராத்தே பாபு', 'ஜாம்பி மிருதன் 2' உள்ளிட்ட பல படங்கள் வரிசையாகக் காத்திருக்கின்றன. தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் கெனிஷா - ரவி மோகன் கூட்டணி தொடர்ந்து பொதுவெளியில் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions