விஜய்யை விட வைரலான த்ரிஷா! தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் ட்ரெண்டாகும் அந்த 'ஊதா' புடவை: விலை இவ்வளவு லட்சமா?
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவில், நடிகை த்ரிஷா அணிந்து வந்த ஊதா நிற பட்டுப் புடவை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதன் பிராண்ட் மற்றும் விலை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே.
தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மே 10ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்றுக் கொண்டார். இந்த பிரம்மாண்ட விழாவில் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இருப்பினும், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது நடிகை த்ரிஷாவின் வருகைதான். கறுப்பு நிற சூட்டில் விஜய் கம்பீரமாகத் தெரிந்தாலும், அவருக்கு இணையாக த்ரிஷாவின் லுக் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
வைரலாகும் ஊதா நிற பட்டுப் புடவை
விழாவிற்கு த்ரிஷா இளஞ்சிவப்பு கலந்த ஊதா (Light Purple/Lavender) நிறத்திலான தூய பட்டுப் புடவையை அணிந்து வந்திருந்தார். தலையில் மல்லிகைப்பூ, பாரம்பரிய ஆபரணங்கள் என மிக எளிமையாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் அவர் காட்சியளித்தது ரசிகர்களைக் கவர்ந்தது. ஏற்கனவே '96' படத்தில் அவர் அணிந்த மஞ்சள் நிற குர்தா (Janu Look) ட்ரெண்டானது போல, தற்போது இந்த ஊதா புடவை பெண்களின் புதிய ஃபேஷன் தேடலாக மாறியுள்ளது.
டவையின் விலை எவ்வளவு?
சமூவலைதளங்களில் இந்த புடவை குறித்து தேடியபோது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன:
- வகை: இது ஒரு கைத்தறி பட்டுப் புடவை (Pure Handloom Silk).
- விலை: இதன் ஆரம்ப விலை 40 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, வேலைப்பாடுகளுக்கு ஏற்ப 1 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
- ஆன்லைன் தேடல்: "Trisha Inauguration Look" என்ற பெயரில் இதே போன்ற நிறம் மற்றும் டிசைன் கொண்ட புடவைகளை பெண்கள் தற்போது ஆன்லைனில் அதிகளவில் தேடி வருகின்றனர்.
அரசியல் வருகையா?
த்ரிஷா இந்த விழாவில் கலந்துகொண்டது வெறும் நட்பின் அடிப்படையிலா அல்லது அவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற விவாதமும் ஒரு பக்கம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, விஜய் பதவியேற்கும்போது த்ரிஷா உணர்ச்சிவசப்பட்ட தருணங்கள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.