பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழாவில் மாஸ் காட்டிய 'DC' படக்குழு: லோகேஷ் கனகராஜ் - அருண் மாதேஸ்வரன் வைரல் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ், முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'DC' (Devadas Chandra). கேப்டன் மில்லர் பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன்-ரொமான்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர், பிரான்சில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற 79-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் (Cannes Film Festival 2026) அதிகாரப்பூர்வமாக திரையிடப்பட்டுள்ளது.

இதற்காக கேன்ஸ் நகருக்குச் சென்றுள்ள படத்தின் கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஆகியோரின் பிரத்யேகப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றன.
சர்வதேச மேடையில் தமிழ் சினிமா: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள 'DC' படத்தின் ட்ரைலர் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டு, உலகளாவிய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிளாக் அண்ட் பிளாக் உடையில் செம ஸ்டைலிஷாக கேன்ஸ் கடற்கரை பின்னணியில் லோகேஷ் கனகராஜும், அருண் மாதேஸ்வரனும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
நாயகனாக அறிமுகமாவது மற்றும் கேன்ஸ் விழா அனுபவம் குறித்துப் பேசிய லோகேஷ் கனகராஜ், "எல்லாமே எனக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது. ஒரு நடிகராக செட்டில் இருந்து அருண் மாதேஸ்வரன் மற்றும் படக்குழுவினர் வேலை செய்வதை கவனித்தது ஒரு சிறந்த கற்றல் அனுபவம்" என்று பகிர்ந்துள்ளார். வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், இந்த ஆண்டின் மிக முக்கிய ஆக்ஷன் திரைப்படமாக எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.