TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை: திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் கே.ஜி. அருண்ராஜுக்கு முக்கிய இலாகா ஒதுக்கீடு!

Share This Article:

தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் (C. Joseph Vijay) தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசின் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியுமான டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் (Dr. K.G. Arunraj) அவர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை (Health, Health Education and Family Welfare) அமைச்சராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் மருத்துவருமான கே.ஜி. அருண்ராஜ், நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்டு 28,712 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதிக்கு முன்னுரிமை கொடுத்த முதலமைச்சர் விஜய்: சென்னை மருத்துவக் கல்லூரியில் (MMC) எம்பிபிஎஸ் (MBBS) முடித்து, பின்னர் 2009-ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று வருமான வரித்துறையில் ஜாயிண்ட் கமிஷனராகப் பணியாற்றியவர் கே.ஜி. அருண்ராஜ். கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த இவர், கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார்.

அரசு நிர்வாகம் மற்றும் மருத்துவத் துறை என இரண்டிலும் இவருக்கு இருக்கும் பரந்த அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் இவருக்குச் சுகாதாரத்துறையை ஒதுக்கியுள்ளார்.

அமைச்சர் அருண்ராஜின் முதல் அறிக்கை: பதவிப் பிரமாணத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், "தமிழக வெற்றிக் கழக அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவைகள் தங்கு தடையின்றிக் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஊழலற்ற, வெளிப்படையான சுகாதாரத் துறையை உருவாக்குவதே எங்களது முதன்மை இலக்கு" என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions