TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"அவர் என் 40 ஆண்டுகால நண்பர்..." - திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!

Share This Article:

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசியது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து இணையத்தில் பரவி வரும் பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் தன்னை பற்றிப் பரவி வரும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்லாவிட்டால், அதுவே உண்மையாகிவிடும் என்பதால் தான் இந்த விளக்கத்தை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் பேசியதாவது:

"தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இணையத்தில் என்னை பற்றிப் பல விமர்சனங்கள் பரவி வருகிறது. அதற்கு நான் பதில் சொல்லாவிட்டால் அது உண்மையாகிவிடும். நடந்து முடிந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் தோற்றது எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.

அவர் அரசியல் தலைவர் என்பதைத் தாண்டி, எனக்கு 40 ஆண்டுகால நண்பர். அந்த 40 ஆண்டுகால நட்பு என்ற முறையில்தான் நான் அவரை நேரில் சென்று சந்தித்தேன். இதில் வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை" என்று மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் புதிய அமைச்சரவை அமைந்து ஆட்சி மாற்றப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நீண்ட கால நண்பரின் தோல்விக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதாக ரஜினிகாந்த் கொடுத்துள்ள இந்த விளக்கம் தற்பொழுது அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions