டெல்லியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: துணை ஜனாதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி வழிபாடு!
சித்திரை திருநாளான இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
டெல்லியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: துணை ஜனாதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி வழிபாடு!
டெல்லி: சித்திரை திருநாளான இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் போது, பிரதமர் மோடிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் முருகப் பெருமானின் திருவுருவப் படத்தை பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த சுவாமி படங்களுக்கு பிரதமர் மலர் தூவி வழிபாடு செய்தார்.
தமிழர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தமிழக மக்களின் நலன்களுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்த்துகளைப் பிரதமர் இந்தத் தருணத்தில் பகிர்ந்துகொண்டார்.

0 Comments
No comments yet. Be the first to comment.