TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - ஓரிரு வாரங்களில் 50,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும்: அமைச்சர் வெங்கட்ரமணன்!

Share This Article:

புதிய குடும்ப அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவித்துள்ளார். தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஓரிரு வாரங்களில் 50,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - ஓரிரு வாரங்களில் 50,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும்: அமைச்சர் வெங்கட்ரமணன்!

புதிய குடும்ப அடையாள அட்டைக்காக (ரேஷன் கார்டு) காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் வெளியிட்டுள்ளார். தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த புதிய குடும்ப அட்டை வழங்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தயாராகி வரும் 50,000 புதிய குடும்ப அடையாள அட்டைகள் ஓரிரு வாரங்களுக்குள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை பகுதியில் அரசு சார்பில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலைய கிடங்கில் அண்மையில் ஏற்பட்ட மர்மமான தீ விபத்து தொடர்பாக இன்று அமைச்சர் வெங்கட்ரமணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நெல்மணிகள், சாக்கு பைகள் மற்றும் கிடங்கில் இருந்த பிற பொருட்களை அமைச்சர் பார்வையிட்டு, சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

Content image

மேலும், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், கிடங்குகளின் கட்டமைப்பு, பாதுகாப்பு வசதிகள் மற்றும் சேமிப்பு முறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்து அதிகாரிகள் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்திருந்ததாக அமைச்சர் கூறினார். அவை அனைத்தும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிகளவில் கொள்முதல் செய்யப்படும் நெல் திறந்தவெளி கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு, பின்னர் அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரவையிடப்பட்டு, மாவட்ட வாரியாக பொது விநியோகத் திட்டத்திற்காக அரிசி அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.

இந்த தீ விபத்து இயற்கையாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், கள ஆய்வின் மூலமே உண்மை நிலை முழுமையாக தெரியவரும் என்பதால் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், சேதமடைந்த திறந்தவெளி நெல் கொள்முதல் கிடங்கை விரைவில் முழுமையாக மேம்படுத்தி புதிய வசதிகளுடன் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Content image

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய குடும்ப அடையாள அட்டை வழங்கும் பணிகள் குறித்தும் அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்தப் பணிகள் மீண்டும் வேகமடைந்துள்ளதாகவும், சுமார் 50,000 புதிய குடும்ப அடையாள அட்டைகள் தயாராகும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் இந்த குடும்ப அட்டைகள் அனைத்தும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த அறிவிப்பு, பல மாதங்களாக புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் குடும்பங்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப அட்டை வழங்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், புதிய விண்ணப்பங்கள் மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் பரிசீலனையும் விரைவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தகுதியான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் விரைவில் பொது விநியோகத் திட்டத்தின் பலன்களைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions