TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

திருப்பூரில் பரபரப்பு: விஜயைக் காணக் காத்திருந்த 9 பெண்கள் உட்பட 10 பேர் மயக்கம்!

Share This Article:

திருப்பூரில் பரபரப்பு: விஜயைக் காணக் காத்திருந்த 9 பெண்கள் உட்பட 10 பேர் மயக்கம்! திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொள்ளவிருந்த பரப்புரையைக்காண நீண்ட நேரமாகக் காத்திருந்தவர்களில், 9 பெண்கள் உட்பட 10 பேர் திடீரென மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் பரபரப்பு: விஜயைக் காணக் காத்திருந்த 9 பெண்கள் உட்பட 10 பேர் மயக்கம்!

திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் தவெக தலைவர் விஜய் தனது அரசியல் பரப்புரையை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தார். அவரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் காலை முதலே சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த சந்திப்பில் திரண்டிருந்தனர்.


கூட்ட நெரிசல் மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக, காத்திருந்தவர்களில் 9 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 10 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். அங்கிருந்த தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற பொதுக் கூட்டங்களுக்கு வருபவர்கள் போதிய தண்ணீர் மற்றும் குடைகளுடன் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions