TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்... “கிளாடியேட்டர்ஸ்” டாக்குமென்ட்ரி சென்சார் ரெடி!

Share This Article:

அஜித்குமாரின் சர்வதேச கார் ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் உருவாக்கியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படம், அஜித்தின் ரேசிங் சவால்கள் மற்றும் சாதனைகளை பதிவு செய்ய உள்ளது.

அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்... “கிளாடியேட்டர்ஸ்” டாக்குமென்ட்ரி  சென்சார் ரெடி!

நடிகர் அஜித்குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ (GLADIATORS) ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள நிலையில், இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.

‘ரேசிங் உலகின் உண்மை தருணங்கள்’ ஆவணப்படத்தில்

அஜித்தின் திரைப்பயணத்திற்கு இணையாக அவரது கார் ரேசிங் மீதான ஆர்வமும், சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸில் அவர் எதிர்கொண்ட சவால்களும் ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றவை. அந்தப் பயணத்தை மையமாக வைத்து ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் உருவாகியுள்ளது.

இளம் வயது முதலே கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட அஜித், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்தப் பயணத்தில் விபத்துகள் மற்றும் கடுமையான சவால்களை சந்தித்த போதிலும், தனது ஆர்வத்தை கைவிடாமல் தொடர்ந்து ரேசிங் உலகில் பயணித்து வருகிறார்.

Content image

சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, Asian Le Mans மற்றும் 24H Series போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் அஜித் பங்கேற்ற தருணங்களும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறுகின்றன. அவரது ரேசிங் அணியான AK Racing மற்றும் சர்வதேச போட்டிகளில் அவர் சந்தித்த அனுபவங்களும் இதில் முக்கிய இடம் பெறுகின்றன.

சவால்கள் முதல் சாதனை வரை...

ரேசிங் களத்தில் அஜித் எதிர்கொண்ட சவால்கள், பின்னடைவுகள், விபத்துகள் மற்றும் அதன் பிறகு அவர் மீண்டும் களமிறங்கிய தருணங்கள் என அவரது பயணத்தின் பல முக்கியமான நிகழ்வுகள் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் மட்டுமல்லாமல், மோட்டார் ஸ்போர்ட்ஸிலும் தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய அஜித்தின் மற்றொரு முகத்தை ரசிகர்களுக்கு இந்தப் படம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அஜித்தின் ரேசிங் சாதனைகளைப் பதிவு செய்யும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அதில் அஜித்தின் கம்பீரமான தோற்றம் மற்றும் அதிவேகமாக சீறிப்பாயும் ரேசிங் கார்கள் இடம்பெற்றுள்ளன.

Content image

அஜித்தின் ரேசிங் பயணம்

சினிமாவில் பிஸியாக இருந்த காலங்களிலும் கார் ரேசிங் மீதான ஆர்வத்தை அஜித் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார். சில காலம் சினிமாவுக்காக ரேசிங்கில் இருந்து விலகியிருந்த அவர், பின்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார்.

தற்போது அவரது ரேசிங் பயணத்தை முழுமையாக பதிவு செய்யும் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் உருவாகி வருவது அஜித் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions