TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கள்ளச்சாராய மரணங்கள்: குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாணிக்கம் தாகூர்

Share This Article:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவிற்கு பின்னால் இருக்கும் அரசியல் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், கடமை தவறிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

கள்ளச்சாராய மரணங்கள்: குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாணிக்கம் தாகூர்

அதிகாரிகளின் கடமை தவறிய போக்கும் பகிரங்க ஏலமும்:

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதியரசரின் இறுதி விசாரணை அறிக்கையின்படி, கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனைக்காகச் சட்டவிரோதமாகப் பகிரங்க ஏலம் நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

  • இந்த ஏலத்தில் வெற்றி பெற்ற ஏலதாரருக்கு, கள்ளச்சாராயத்தை எவ்வித இடையூறும் இன்றி விற்பனை செய்ய முழு உரிமையும் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக அந்த ஏலதாரரிடமிருந்து ரூபாய் 5 லட்சம் வாங்கப்பட்டுள்ளது.
  • இவை அனைத்தும் தெரிந்திருந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித தற்காப்பு அல்லது தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இந்தத் துரோகம் மிகுந்த வேதனையளிப்பதாக நீதியரசர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைகளுக்கு இடையேயான 'கேடான கூட்டணி:

விஷச்சாராய விற்பனையானது தனி நபர் ஒருவரால் சாத்தியப்பட்ட ஒன்று அல்ல என்பதை அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

  • காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகிய முக்கிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் மறைமுக ஆதரவும், ஒத்திழைப்பும் இல்லாமல் இந்த விஷச்சாராய விற்பனை தடையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை.
  • கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், அரசுத் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு 'கேடான கூட்டணி இருந்தது இதன் மூலம் மிகத் தெளிவாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
  • இதுபோன்ற மக்கள் உயிருடன் விளையாடும் அதிகார வர்க்கக் கூட்டணிகள் உடனடியாக உடைக்கப்பட வேண்டும் என்றும், கடமை தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகள் பாய வேண்டும் என்றும் நீதியரசர் பரிந்துரைத்துள்ளார்.




Content image

அரசியல் பின்னணி குறித்து விசாரணைக்குக் கோரிக்கை:

கள்ளக்குறிச்சி பேரழிவு நிகழ்ந்த உடனேயே அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த கொடூரச் சம்பவம் வெறும் அதிகாரிகள் மட்டத்திலான அலட்சியத்தோடு மட்டும் முடிந்துவிட்டதா? அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் பின்னணி மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளதா? என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள், இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, உரிய நேர்மையான விசாரணை மூலம் இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சக்திகள் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரையும் முழுமையாகக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வுப் பரிந்துரைகள்:

கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கடந்த அரசு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கியிருந்தாலும், அது மட்டுமே அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டுவிடாது. எனவே, நீதியரசர் கோகுல்தாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பின்வரும் மனிதநேயப் பரிந்துரைகளைத் தமிழக அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனத் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார்


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions