TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

“சிறையில் அடி வாங்கிய தழும்பு இருக்கிறது; தாடை உடைந்தது” – ஸ்டாலின் வீடியோ வெளியீடு

Share This Article:

மிசா காலத்தில் சிறையில் தான் அனுபவித்த கொடுமைகள், தாடை உடைந்த சம்பவம் மற்றும் சிறை தாக்குதலின் தழும்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். சட்டசபை விவகாரம் தொடர்பாக விஜய்க்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

“சிறையில் அடி வாங்கிய தழும்பு இருக்கிறது; தாடை உடைந்தது” – ஸ்டாலின் வீடியோ வெளியீடு

மிசா காலத்தில் சிறையில் இருந்து எனக்கு பெரும் கொடுமைகள் நடந்தன, சிறையில் அடி வாங்கிய தழும்பு இப்போதும் இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: சட்டசபையில் நடந்த சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும், நமது உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதை நான் உணர்கிறேன். இந்தச் சர்ச்சையில் எனது சிறை வரலாறு இருப்பதால், அதைப் பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிறையில் பல கொடுமைகள் நடந்தன. எங்களை அடைத்தே தொழுநோயாளிகள் இருந்த அறையில்தான்.

10 பேருக்கு சிறிய அறைகளில் அடைத்தார்கள். அங்குதான் அனைவரும் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரே துர்நாற்றமாக இருக்கும். அங்குதான் நாங்கள் தூங்க வேண்டும். இரவில் தூங்க விடாமல், போலீஸ் எங்களை லத்தியால் அடிப்பார்கள், பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். மறுபக்கம், ஆயுள் தண்டனைக் கைதிகளை வைத்து அடிப்பார்கள். அவர்கள் தாக்கியதில் என் அண்ணன் எம்.பி. சிட்டிபாபு சிறையிலேயே இறந்துவிட்டார்.

Content image

தாடை உடைந்தது

அவர்கள் தாக்கியதால் என் தாடை உடைந்தது. நீங்கள் கை வைத்து தாடையைக் காட்டியது சரிதான். இன்னும் நான் அடி வாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கின்றன,எனது தாடை உடைந்தது யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.

முதல்வர் விஜய் சட்டசபையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்,ஆட்சியின் நிர்வாகத்தை சினிமா ஷூட்டிங் போல நடத்துகிறீர்கள். எனது வரலாற்றை சட்டசபையில் உள்ள நூலகம் சென்று முதல்வர் விஜய் படித்துப் பார்க்கட்டும்.

Content image

சர்ச்சையாக பேசிய விஜய்

சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது, மிசா காலத்தில் சிறையில் ஸ்டாலின் இருந்தது தொடர்பாக விஜய் தெரிவித்த கருத்துகள் அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. ஸ்டாலினின் தாடையை சுட்டிக்காட்டும் வகையில் விஜய் செய்த செய்கைக்கும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது சிறை அனுபவத்தை விரிவாக எடுத்துரைத்ததுடன், அந்த காலகட்டத்தில் திமுகவினர் எதிர்கொண்ட அடக்குமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

“சண்டை செய்வோம்”

அப்போதும் யாரைப் பற்றி பேசினாலும் கண்ணியத்துடன் பேசுங்கள் என ஆலோசனை கூறினேன். அதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல. ஆட்சி நிர்வாகத்தை சினிமா ஷூட்டிங் போல நடத்துகிறீர்கள். தினந்தோறும் திருட்டு, கொள்ளை, கொலை என சட்டம் ஒழுங்கு படுகுழியில் கிடக்கிறது.

கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் அந்தர் பல்டி அடித்துள்ளீர்கள். எது நிர்வாகத்தின் வாய்ந்த அரசு, நிர்வாக திறன் இல்லாத அரசு எது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக சண்டை செய்வோம்.

இவ்வாறு "ஸ்டாலின்" கூறியுள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions