TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களுக்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு!

Share This Article:

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மக்களின் உரிமைகளை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களுக்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு!

தேர்தல் முடிவுகள் வெளியாகி குறுகிய காலத்திற்குள், மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு சுயநல அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்பவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடும்போது, அவர்களது தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் முறையான விதிகளை உருவாக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "இந்த வழக்கு முடிவடையும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களை நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்; மேலும், இத்தொகுதிகளின் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்புமனுக்களைத் தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது" என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மக்கள் நம்பிக்கையை வீழ்த்திய எம்.எல்.ஏ-க்கள்:

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "எந்தவித தகுந்த காரணமும் இல்லாமல் குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் தேவையற்ற சூழல் உருவாகி, மக்கள் வரிப்பணத்தை மீண்டும் வீணடித்து தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாக்களித்த மக்களின் விரலில் வைக்கப்பட்ட மை காயும் முன்பே, சுயநலத்திற்காக ராஜினாமா செய்து மக்களை மற்றொரு தேர்தலைச் சந்திக்க வைத்துள்ளனர். இது மக்களின் நம்பிக்கையை அடியோடு வீழ்த்தும் செயலாகும். எனவே, அரசியல் சாசனத்தின்படி தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் முறைப்படுத்தக் கோரி இந்த இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும்" என மிகக் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

Content image

நீதிபதிகள் கண்டனம் - தடை விதிக்க மறுப்பு:

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது. எனினும், மக்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள், உரிய காரணங்கள் ஏதுமின்றி இப்படி திடீரென ராஜினாமா செய்வது வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயலாகும். இது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது. இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் ஏதேனும் விதிகள் உள்ளதா? மக்களின் உரிமைகளைத் தேர்தல் ஆணையம் கண்டிப்பாகப் பாதுகாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டனர். அதே நேரத்தில், "தேர்தல் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டதால், தற்போது இந்த இடைத்தேர்தல்களுக்குத் தடை விதிக்க முடியாது" என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

விசாரணை ஒத்திவைப்பு:

இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது எழுந்துள்ள இந்தச் சூழல் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பதிலளிக்கக் கூடுதல் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், "தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கூட இடைத்தேர்தலில் போட்டியிட முடியும் எனச் சட்ட விதிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதோடு, எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், தலைமை நீதிபதி அமர்வு தனது தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது" என்பதையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions