TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களைத் தாக்கல் செய்தார் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

Share This Article:

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 33% பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களைத் தாக்கல் செய்தார் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் நாட்டின் எதிர்கால அரசியலைத் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான மசோதாக்களைத் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது.


மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 131-வது அரசியல் சாசன திருத்த மசோதாவையும் (பெண்கள் இடஒதுக்கீடு), 2026-ம் ஆண்டுக்கான தொகுதி மறுவரையறை மசோதாவையும் மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் 2029 மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.


தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின்படி, மக்களவையின் மொத்த இடங்களை 543-ல் இருந்து 850-ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுகள் இடம் பெற்றுள்ளன. இதில் 33 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பதன் மூலம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் வரவேற்றாலும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள 'தொகுதி மறுவரையறை' அம்சத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாகத் தென் மாநிலங்களின் அரசியல் பலம் குறையும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு வருகின்றன. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் இன்று நள்ளிரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions