TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

40 கி.மீ. துரத்தல்... காரின் கூரையில் துணிச்சலுடன் சென்ற காவலர்! அன்புமணி பாராட்டு!

Share This Article:

கோவையில் சுமார் 300 கிலோ குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்திச் சென்ற காரை 40 கி.மீ. துரத்திச் சென்று பிடிக்க உதவிய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். அவரது கடமை உணர்வை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

40 கி.மீ. துரத்தல்... காரின் கூரையில் துணிச்சலுடன் சென்ற காவலர்! அன்புமணி பாராட்டு!

கோவை,

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையின்போது தப்பிச் சென்ற குட்கா கடத்தல் கும்பலை சுமார் 40 கி.மீ. தூரம் துரத்திச் சென்று பிடிக்க உதவிய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சல் குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவில்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக பதிவு கொண்ட சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டது. காரில் சந்தேகத்திற்கிடமான வகையில் மூட்டைகள் இருந்ததால் போலீசார் சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது காரில் இருந்த 3 பேர் போலீசாரைத் தள்ளிவிட்டு காரை வேகமாக இயக்கி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமை காவலர் வேல்முருகன் ஓடும் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துக் கொண்டார். சுமார் 40 கி.மீ. தூரம் காரின் கூரையில் ஆபத்தான நிலையில் பயணித்தபடியே கடத்தல்காரர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். 

Content image

கணியூர்:

கணியூர் சுங்கச்சாவடி வழியாகச் சென்ற காரை போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் இணைந்து துரத்தின. பின்னர் அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே காரை சுற்றிவளைத்து போலீசார் மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்த 3 பேரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 300 கிலோ குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பெங்களூரில் இருந்து கோவை பகுதிக்கு இப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் தலைமை காவலர் வேல்முருகன் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், அவரது கடமை உணர்வை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions